சூது கவ்வும் 2 திரை விமர்சனம்
முதல் பாகம் நடைபெறும் அதே யுனிவர்சில் தான் இந்த இரண்டாம் பாகமும் நடைபெறுகிறது. சூது கவ்வும் முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் கருணாகரன் அரசியல் என்ட்ரி கொடுத்திருப்பார். தற்போது இந்த இரண்டாம் பாகத்தில் நிதி அமைச்சராக மூன்று முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்து வருகிறார். ஊழல் செய்வதையே அரசியலாக வைத்திருக்கும் கருணாகரன் ஒரு கட்டத்தில் மாட்டிக் கொள்கிறார். இதற்கிடையே முதல் பாகத்தில் விஜய் சேதுபதி கடத்தல் தொழில் செய்து வருவது போல், இரண்டாம் பாகத்தில் தனக்கென்று சில கொள்கை, கோட்பாடுகளைக் கொண்டு மிர்ச்சி சிவா கடத்தல் தொழில் செய்து வருகிறார். அரசியல் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நிதி அமைச்சர் கருணாகரனை மிர்ச்சி சிவா கடத்த, அதன் பின் என்ன நடக்கிறது? எதற்காக கருணாகரனை மிர்ச்சி சிவா கடத்துகிறார்? தனக்கு இருக்கும் பிரச்சனைகளில் இருந்து கருணாகரன் விடுபட்டாரா ? என்பதுதான் படத்தின் மீதி கதை.
முதல் பாகத்தில் இடம் பெற்ற கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், ராதாரவி, அருள்தாஸ், சைக்கோ போலீஸ் கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் இடம்பெற்று இருக்கின்றன. படத்தில் கதாநாயகனாக வரும் மிர்ச்சி சிவா மற்றும் அவர் கேங்கில் இருக்கும் நபர்கள் செய்யும் நகைச்சுவை, சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறது. அரசியல் குறித்து இடம்பெற்றிருந்த வசனங்கள், அதில் வந்த நகைச்சுவையை இயக்குனர் எஸ் ஜே அர்ஜுன் அழகாக வடிவமைத்திருந்தார். மிர்ச்சி சிவா மற்றும் கேங் செய்யும் காமெடிகளை கண்டிப்பாக ரசித்து விட்டு வரலாம்.
0 comments:
Post a Comment