சொர்க்கவாசல் திரை விமர்சனம்

 

செய்யாத கொலைக்கு குற்றவாளியாக்கப்படும் ஆர்ஜே பாலாஜி, சென்னை மத்திய சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்படுகிறார். சிறைச்சாலையில் ரவுடி செல்வராகவன் ராஜ்ஜியம் நடத்த, அவருக்கும் புதிதாக வரும் சிறை அதிகாரிக்கும் மோதல் ஏற்படுகிறது. தான் குற்றம் அற்றவன் என்பதை நிரூபித்து விடுதலையாக வேண்டும் என்று நினைக்கும் ஆர்ஜே பாலாஜியின் எண்ணத்தை புரிந்துக்கொள்ளும் அதிகாரி, ஆர்ஜே பாலாஜியை வைத்தே, செல்வராகனுக்கு முடிவு கட்ட திட்டம் போடுகிறார். அதிகாரியின் திட்டத்தை மீறி வேறு ஒன்று நடக்க, அதன் மூலம் சிறைச்சாலையில் மிகப்பெரிய கலவரம் ஏற்படுகிறது. அந்த கலவரம் ஆர்ஜே பாலாஜியின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது, அவர் நினைத்தது நடந்ததா? சிறை அதிகாரி நினைத்தது நடந்ததா? என்பதே படத்தின் மீதி கதை.


ஆர்.ஜே.பாலாஜிதான் நாயகன். அவரது நடிப்புக்கு புதுப்பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது இப்படம்.


செய்யாத குற்றத்திற்காகச் சிறைக்கு வந்து ஆதங்கப்படுவது, குடும்ப நிலையை நினைத்து குமுறுவது, நடக்கும் சம்பவங்களால் ஏற்படும் பதற்றம் என சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார்.  அற்புதம்!


சிறை அதிகாரி கட்ட பொம்மனாக வரும் கருணாஸ்,  பேச்சில் நயம், கண்களில் விசம் என சிறப்பான நடிப்பை அளித்து  உள்ளார். நாளுக்கு நாள் அவரது நடிப்பு மெருகேறி வருகிறது. விசாரணை அதிகாரியாக வரும் நட்டி நடராஜன்,  காதலியாக வரும் சானியா ஐயப்பன், கைதிகளாக வரும் ஷோபா சக்தி, பாலாஜி சக்திவேல், மௌரிஷ், சாமுவேல் ராபின்சன், ரவி ராகவேந்திரா உள்ளிட்ட அனைவருமே பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.


பெரும்பாலாம் சிறைக்குள்ளேயே நடக்கும் கதை. ஆனாலும் வித்தியாசமான கோணங்களில் காட்சிகளைக் கொடுத்து ரசிக்க வைத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன்.  பின்னாலேயே ஓடிவரும் செல்ல நாய்க்குட்டி போல, காட்சிகளைத் ஆர்வத்துடன் தொரும் அவரது கேமராவின் பங்களிப்பு சிறப்பு.


இதற்கு முக்கிய காரணம்,   எஸ்.ஜெயசந்திரனின் கலை இயக்கம்!  அருமையான பங்களிப்பு!


நான்-லீனியராக நகரும் திரைக்கதை. ஆனால் எந்தவித குழப்பமும் இல்லாத வைகையில்  தொகுத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் அதிகார வர்க்கம், சிறைக்கைதிகளை எப்படி பயன்படுத்திக் கொள்கினறன என்பதையும், கைதிகளுடன் அதிகார வர்க்கம் எப்படி தொடர்பில் இருக்கிறது என்பதையும் கூர்மையாகச் சொல்லி இருக்கிறார்.

0 comments:

Pageviews