டிஆர்ஏ ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனா நியமனம்

 

ரியல் எஸ்டேட் துறையில் சென்னையின் அடையாளமாக திகழும் டிஆர்ஏ நிறுவனம் தனது விளம்பர தூதராக தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனாவை நியமனம் செய்துள்ளது. இவரை பிராண்ட் தூதராக நியமித்து இருப்பதன் மூலம் தங்களது புதிய தத்துவமான ‘பெருமைமிகு இல்லம்’ என்னும் தாரக மந்திரத்திற்கு ஏற்ப தங்களது வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்ய இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  

தற்போதைய மாற்றத்தின் ஒரு பகுதியாக, டிஆர்ஏ நிறுவனம், ராஷ்மிகாவை வைத்து புதிய தொலைக்காட்சி விளம்பரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது மக்கள் தங்கள் வீடுகள் மீது வைத்திருக்கும் உணர்ச்சிபூர்வமான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. தொலைக்காட்சி விளம்பரம் தவிர, பத்திரிக்கை, டிஜிட்டல் விளம்பரங்கள், மல்டிபிளக்ஸ் விளம்பரம் எனது அனைத்து தளங்களிலும் இந்த விளம்பரத்தை டிஆர்ஏ வெளியிடுகிறது.

ராஷ்மிகா மந்தனா, இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இணைந்திருப்பதன் மூலம், டிஆர்ஏ தனது வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கவும், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுடன் தனது வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.  அத்துடன் வீடு வாங்குபவரின் கனவை நனவாக்கும் அதேவேளையில், தரமான, பிரமாண்ட வீடுகளை சிறந்த விலையில் வழங்குவதற்கான இந்நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. ‘பெருமைமிகு இல்லம்’ விளம்பரத்திற்கான கருத்துருவாக்கத்தை ப்ளூ நூடுல்ஸ் நிறுவனம் செய்துள்ளது.

புதிய விளம்பரம் குறித்து டிஆர்ஏ நிர்வாக இயக்குனர் ரஞ்ஜித் ரத்தோட் கூறுகையில், எங்களின் தேசிய பிராண்ட் தூதராக ராஷ்மிகா மந்தனா இணைந்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், 'பெருமைமிகு இல்லம்' என்பது, எங்களின் புதுப்பிக்கப்பட்ட தத்துவத்தின் சாராம்சத்தை உள்ளடக்கி உள்ளது. ராஷ்மிகா அவரது திறமையான நடிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் காரணமாக தேசிய அளவில் நல்ல நடிகையாக விளங்கி வருகிறார். 

அவரது விடாமுயற்சி, நம்பிக்கை ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. அதேபோன்று நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையுடன் வீடுகளை மட்டுமல்ல, நீடித்த பாரம்பரியத்தையும் உருவாக்கி வருகிறோம் என்று தெரிவித்தார்.

இது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா கூறுகையில், டிஆர்ஏ பிராண்ட் தூதராக கைகோர்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டிஆர்ஏ தனது புதிய பயணத்தைத் தொடங்கும் இவ்வேளையில், இந்த பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, மேலும் அதில் நானும் இடம் பெற்றிருப்பது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களின் இந்த புதிய ‘பெருமைமிகு இல்லம்’ விளம்பரம் மூலம் வரவிருக்கும் ஆண்டுகளில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு இல்லத்தை நனவாக்குவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த விளம்பரத்தை பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார். பிராண்ட் ஆலோசனை மற்றும் விளம்பரங்களில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி படைப்பாற்றல் நிறுவனமான ப்ளூ நூடுல்ஸ் இந்த விளம்பரத்தை தயாரித்துள்ளது.

0 comments:

Pageviews