ராக்கெட் டிரைவர் திரை விமர்சனம்

 

சென்னைவாசியான, பிரபா, படித்தவர், அறிவியலில் நாட்டம் உள்ளவர். சந்தர்ப்ப சூழலால் ஆட்டோ ஓட்டுகிறார். ஒரு நாள் ஒரு சிறுவன் அவரது ஆட்டோவில் ஏறுகிறான். தன் பெயர் அப்துல் கலாம் என்றும், 1948ம் ஆண்டில் இருந்து வருவதாகவும் கூறுகிறான். தனது சொந்த ஊர் ராமேஸ்வரம் என்றும் சொல்கிறான்.

“முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், டைம் டிராவல் செய்து வந்திருக்கிறார்” என்று உற்சாகத்தில் குதிக்கிறார் பிரபா. இதை, பிரபாவின் தோழி, கமல், அறிவியல் ஆசிரியர் ஆனந்த் குமாரசாமி உள்ளிட்ட எவரும் நம்பவில்லை. ஆனால் பிரபா நம்புகிறார். அந்த சிறுவன், தனது தாயைப் பார்க்க வேண்டும் என சொல்ல.. இருவரும் ராமேஸ்வரம் செல்கிறார்கள். அங்கு, அப்துல்கலாமின் பால்ய நண்பரான, முதியவர் சாஸ்திரியை சந்திக்கிறார்கள். அந்த முதியவரும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு நம்புகிறார். அப்துல்கலாம் தனது தாயை சந்தித்தாரா, பிறகு என்ன நடந்தது என்பதே கதை.


இந்த இயக்குநருக்கு மட்டும் இன்னும் நல்லதொரு பட்ஜட்டை ஒதுக்கி இருந்தால் தரமானதாகவும், பிரம்மாண்டமானதாகவும் படைப்பை  உருவாக்கி இருப்பார். இருந்தாலும் சிறிய முதலீட்டில் எடுத்த கதையை நேர்த்தியாக விவரித்திருக்கிறார் இயக்குநர்.‌


இந்த கதையின் வெற்றிக்கு அவர் தெரிவு செய்த கதாபாத்திரங்களும், கதாபாத்திரத்திற்கான நடிகர்களும் மிக முக்கிய காரணம். 


கதையை வழிநடத்திச் செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் விஸ்வத்தை விட அவரை விட வயதில் மூத்தவராக நடித்திருக்கும் நடிகை சுனைனா வை விட  ஏபிஜே அப்துல் கலாமின் இளம் வயது தோற்றத்தில் நடித்திருக்கும் நடிகர் நாகா விஷாலின் தேர்வும், நடிப்பும் பிரமாதம். அதேபோல் ஏபிஜே அப்துல் கலாமின் நண்பர் சாஸ்திரியாக நடித்திருக்கும் மூத்த நடிகர் காத்தாடி ராமமூர்த்தியின் நடிப்பும் சிறப்பு.‌

0 comments:

Pageviews