ஆலன் திரை விமர்சனம்
சிறு வயதில் விபத்து ஒன்றில் தனது குடும்பத்தை இழந்த நாயகன் வெற்றி, தன் மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு சென்று அங்கிருக்கும் மடத்தில் சேர்ந்து ஆன்மீகத்தில் மூழ்க நினைக்கிறார். ஆனால், எழுத்தாளர் ஆக வேண்டும் என்று விரும்பும் அவரது மனது கடந்த 10 வருடங்களாக முயற்சித்தும் ஆன்மீகத்தை ஆட்கொள்ள மறுக்கிறது. இதனால், தான் நேசிக்கும் எழுத்துலகை நோக்கிய தனது பயணத்தை தொடங்குகிறார். அப்போது அவருக்கு கிடைக்கும் ஒரு பெண்னின் நட்பு, அவரது பாலைவனம் போன்ற வாழ்க்கையை சோலைவனமாக மாற்றுகிறது. அதன் மூலம் துறவியாக சுற்றி திரிந்தவர் சக மனிதராக மாறி, தன் மனம் விரும்பும் எழுத்துலகில் இணைய முற்படும் போது, மீண்டும் ஒரு கசப்பான சம்பவத்தை எதிர்கொள்கிறார். அதன் மூலம் மீண்டும் திசை மாறும் வெற்றியின் வாழ்க்கை என்னவானது?, அவர் விரும்பிய எழுத்துலகில் அவர் சாதித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தியாகுவாக நடித்திருக்கும் நடிகர் வெற்றி , அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் தன்னாலான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
தியாகு கதாபாத்திரத்தை இயக்குநர் முடிந்த வரை நிறைவாக எழுதியிருக்கிறார். தியாகுவின் வாழ்க்கையில் குறுக்கிடும் ஜனனி தாமஸ் மற்றும் தாமரை ஆகிய இரண்டு பெண்களின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான கலைஞர்களை, நடிகைகளை தெரிவு செய்து நடிக்க வைத்திருப்பதற்கு பாராட்டு தெரிவிக்கலாம்.
இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாவும் படத்தின் தன்மை புரிந்து கொண்டு படத்தோடு ஒன்றி இசையமைத்திருக்கிறார்.
மனித வாழ்வின் உணர்ச்சி நிலைகளான பாசம், குரோதம், வஞ்சம், காதல், காமம், துறவறம் என்று எல்லா தளங்களிலும் பயணப்பட்டு இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி இருக்கிறார் இயக்குனர் ஆர்.சிவா. அவரே தயாரிப்பாளரும் ஆனதால் அவரது விருப்பப்படியே இந்தப் படம் திரைக்கு வந்திருக்கிறது.
0 comments:
Post a Comment