சாலா திரை விமர்சனம்

 

வடசென்னை ராயபுரத்தில் குறிப்பிட்ட ஒரு மதுபானக் குடிப்பகத்தை அதாவது பாரை கைப்பற்ற இரு தரப்பினர் கொலைவெறியோடு மோதிக் கொள்கிறார்கள். அதில் பாரை கைப்பற்றுவதை லட்சியமாக கொண்டிருக்கிற தரப்பு பல இடங்களில் பார் நடத்துகிறது. இன்னொரு தரப்பு போலி மதுபான உற்பத்தியில் பலமாக இருக்கிறது. கதையின் நாயகன் பாரை கைப்பற்ற நினைப்பவரின் பாசத்துக்குரியவராய், அடியாளாய், விசுவாசியாய் இருக்கிறார். அந்த விசுவாசி நேசிக்கும் பெண் மது ஒழிப்புக்காக பொதுமக்கள் ஒத்துழைப்போடு போராடுகிறவர். பார் யார் வசமானது? நாயகியின் மது ஒழிப்பு போராட்டத்திற்கு பலன் கிடைத்ததா? என்பது தான் படத்தின் மீதிக்கதை 


நாயகனாக நடித்திருக்கும் தீரன், ஆஜானுபாகுவான உடலுடனும் அப்பாவித்தனமான முகத்துடனும் உலா வருகிறார்.சண்டைக்காட்சிகள் தன் முழுத்திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கிறார் ரேஷ்மா வெங்கட்.நாயகிகள் காதல் காட்சிகளுக்கானவர் என்கிற இலக்கணத்தை உடைத்து மதுவுக்கு எதிரான போராட்டங்களில் மக்களை ஒருங்கிணைக்கும் கதாபாத்திரத்தில் சரியாக நடித்து கைதட்டல் பெறுகிறார். சார்லஸ் வினோத், அருள்தாஸ் ஆகியோர் எதிர்மறை வேடங்கள் ஏற்றிருந்தாலும் அதில் நேர்மறையாக நடித்து பாத்திரங்களுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.


தீசனின் பின்னணி இசை படத்தை பரபரப்பாக நகர்த்த உதவியிருக்கிறது. ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு மிகமிக நேர்த்தி. மதுவின் தீமையை எடுத்துச் சொல்வதற்காக வைத்திருக்கிற துளியும் எதிர்பாராத நிறைவுக் காட்சி மனதை ரணப்படுத்துவது உறுதி.

0 comments:

Pageviews