கொட்டுக்காளி திரை விமர்சனம்

 

கதைப்படி அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் ஒரு பெண் தலையில் தண்ணி ஊற்றிவிட்டு, இன்னொரு பெண்ணிற்கு விபூதி வைத்துவிட்டு செல்கிறாள். அதன் பின்னால் சூரி உட்பட அவருடைய சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கூடவே செல்கின்றனர். இடையில் காவல் அதிகாரி இடைமறிக்கும் போது தான் தெரிகிறது, சூரியின் அக்கா மகளான அன்னா பென்னுக்கு பேய் பிடித்திருக்கிறது என்று. அதன்பின் அன்னா பென்னுக்கு பிடித்த பேய்யை அவர்கள் விரட்டினார்களா..? இல்லையா..? என்பது தான் படத்தின் மீதிக்கதை 


படத்தில் பாண்டி கதாபாத்திரத்தில் சூரி மிரட்டி இருக்கிறார். படத்தின் முழு கதையுமே சூரி சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக, அவர் கவ்விய தொண்டையுடன் பேசி நடித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. நாயகியாக நடித்திருக்கும் அன்னாபென், கண்களிலும் கண்ணசைவுகளிலும் சின்னச் சின்ன முகம் திருப்பலிலும் பார்வையாளர்களுக்கு ஏதாவது ஓர் உணர்வைக் கடத்தியிருக்கிறார்.


படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஓடுவதும், குடும்பங்கள் பயணிப்பதும் என்று இயக்குனர் கடைசிவரை கதையை பதட்டத்துடனே இயக்கி இருக்கின்றார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் பொண்ணுக்கு பேயோட்டும் காட்சியை விவரிக்கும் வகையில் சமூகத்திற்கு ஒரு நல்ல தகவலையும் இயக்குனர் கூறி இருக்கிறார்.

0 comments:

Pageviews