லாந்தர் திரை விமர்சனம்
கோயம்புத்தூர் பகுதியில் படத்தின் கதை நகர்கிறது. படத்தில் ஏ சி பி அரவிந்தாக ஹீரோ விதார்த் வருகிறார். இவர் ஆரம்பத்திலேயே கள்ளச்சாராயம் தயாரிக்கும் கும்பலை கைது செய்கிறார். இப்படி இருக்கும்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் சாலையில் செல்பவர்களை கொடூரமாக தாக்கிக் கொண்டிருக்கிறார். இவரைப் பிடிக்க செல்லும் போலீஸ் அதிகாரிகளையும் அந்த நபர் தாக்குகிறார்.
இந்த சைக்கோவை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்று அரவிந்துக்கு ஆர்டர் வருகிறது. தீவிரமாக அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் விதார்த் இறங்கினார். இறுதியில் அந்த சைக்கோவை விதார்த் பிடித்தாரா? அந்த சைக்கோ யார்? எதற்காக இதையெல்லாம் செய்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர் விதார்த் மிக நன்றாக நடித்துள்ளார் காவல் துறை அதிகாரியாக மிக கச்சிதமாக பொருந்தியுள்ளார். நடிகை ஸ்வேதா டோரத்தி சிறிது கதாபாத்திரமாக இருந்தாலும் கதை கேட்ப கச்சிதமாக புரிந்துள்ளார் நன்றாக நடித்துள்ளார். விபின் மிக நன்றாக நடித்துள்ளார் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். நடிகை சஹானா இப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளார் அவரது நடிப்பு மிக அற்புதம்.
இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. இயக்குனர் சஸ்பென்ஸ் திரில்லராக எடுத்துள்ளார் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு திரைப்படம் ஒரு விருந்தாக அமைந்துள்ளது. ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.
0 comments:
Post a Comment