ரயில் திரை விமர்சனம்

 

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நாயகன் குங்குமராஜ் எலக்ட்ரிக் வேலை செய்து வந்தாலும், மது பழக்கத்திற்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் எந்த நேரமும் மது குடிப்பதிலேயே நாட்டம் கொண்டிருக்கிறார். இதனால், அவரது மனைவி வைரமாலாவுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் நாயகனை மதிப்பதில்லை. இதனால் விரக்தியில் இருக்கும் நாயகன் தன் கோபத்தை, தன் வீட்டின் எதிரே குடியிருக்கும் வட மாநில வாலிபர் பர்வேஸ் மெஹ்ரூ மீது காட்டுகிறார். ஆனால், அவரது மனைவி வைரமாலா, வட மாநில வாலிபரை தனது சொந்த தம்பியாக நினைத்து பழகுகிறார்.

 தனது சொந்த ஊருக்கு போகும் சூழலில், பர்வேஸ் வைரமாலாவிடம் ஒரு பையை கொடுக்கிறார். அதை திரும்ப வாங்குவதற்குள் அவர் திடீரென்று மரணமடைய, அவரது இறுதி சடங்கிற்காக அவரது மனைவி, குழந்தை, தந்தை ஆகியோர் தேனி வருகிறார்கள். இறுதிச் சடங்கு முடிந்த பிறகு பர்வேஸ் வைத்திருந்த பணம் பற்றி அவரது குடும்பத்தார் கேட்கிறார்கள். அப்போது தான் வைரமாலாவுகு பர்வேஸ் தன்னிடம் கொடுத்த பை நினைவு வருகிறது. அதை அவர் எடுக்க செல்லும் போது அந்த பை அங்கு இல்லாததால் அதிர்ச்சியடைகிறார். அந்த பை என்ன ஆனது?, பர்வேஸ் குடும்பத்திற்காக வைரமாலா என்ன செய்தார்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் குங்குமராஜ், நாயகியாக நடித்திருக்கும் வைரமாலா இருவரும் மண் சார்ந்த மனிதர்களாக மனதில் நிற்கிறார்கள். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரம் மிக நன்றாக நடித்துள்ளனர்.

அனைவரும் கொடுத்தவரை மிக கச்சிதமாக செய்துள்ளனர் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர்.

திரைப்படம் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது திரைப்படம் உணர்த்தும்.

இசை மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது.

ஆக மொத்தத்தில் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்


0 comments:

Pageviews