PT சார் திரை விமர்சனம்
வேல்ஸ் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க, கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து வெளியாகியுள்ள படம் PT Sir.
ஹிப் ஹாப் ஆதி யுடன் , காஷ்மீரா, பிரபு, பாண்டியராஜன், பாக்கியராஜ், தியாகராஜன், இளவரசு, அனிகா, தேவதர்ஷினி, பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் நடிசிருக்காங்க…
ஹிப்ஹாப் ஆதியே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவனத்தில் பிடி வாத்தியாராக வேலை பார்க்க்கிறார் ஹிப் ஹாப் ஆதி.. அவரது அம்மா தேவதர்ஷினி ஜாதகத்தில் அவருக்கு நேரம் சரியில்லாத காரணத்தால், தினமும் வேலைக்கு கிளம்பும் நேரத்தில் சண்டை சச்சரவுகளுக்கு செல்லாமல், வீதியில் எது நடந்தாலும் பார்த்தும் பாராமல் வீடு வந்து சேர வேண்டும் என்று இவருக்கு கிளாஸ் எடுக்கிறார்…. இந்நிலையில்
தன் பள்ளி நிறுவனத்தில் மேஜிக் சுவர் ஒன்றை எழுப்பி அதில் மாணவர்கள் தாங்கள் நம்பும், நடக்க வேண்டிய விஷயங்களையும் எழுத சொல்லி அவர்களைச் உற்சாக படுத்தி, மாணவர்களின் மத்தியில் நல்ல பெயரை எடுக்கிறார்..
எதிர் பாரா விதமாக, இதே சுவரால், எதிர்வீட்டு இளவரசு வின் பெண்ணான அனிகா மூலம் பிரச்னை வரவே, தன் வேலை செய்யும் பள்ளியில் இருந்து நீக்கப்பட, அணிகாவின் பிரச்னை யை, சமூக பிரச்சினையாக திசை திருப்பி, தீர்வு காண முயலுகிறார்.. அணிகாவின் பிரச்சினை என்ன ??அதனை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் ?? அதற்கு தீர்வு என்ன ? என்பதே மீதிக்கதை…
முதல் பாதி பாடல் காமெடி கொஞ்சம் கதை என்று மெல்ல செல்ல, இடைவேளை யில் கொஞ்சம் சூடு பிடிக்கிறது ..ஆதி வழக்கம் போல் காமெடி கலந்து நடித்தாலும், அனிகா வை மையப்படுத்தியே கதை அமைந்துள்ள நிலையில், ஆதி யின் நடிப்பு படத்தின் பிற்பாதியில் ஓகே ரகம்…அணிகா கதையை உள் வாங்கி தேவையான அளவிற்கு அளவான நடிப்பை வழங்கி படத்துடன் நம்மை ஒன்ற வைத்துள்ளார். பெண்களின் பாலியல் சீண்டல்களைப் பற்றி வாதாடும் சீரியஸான காட்சி யை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக எடுத்திருக்கலாம்.
0 comments:
Post a Comment