சாமானியன் திரை விமர்சனம்

 

எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘கரகாட்டக்காரன்’ உள்ளிட்ட பல வெள்ளி விழா படங்களை கொடுத்த வெள்ளி விழா வெற்றி நாயகன் ராமராஜன் நடிப்பில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாகி இருக்கும் படம் ‘சாமானியன்’.


ராஹேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ராமராஜன், ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர்,நக்ஷா சரண் லியோசிவா,உள்ளிட்ட நடிகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் ஆரம்பத்திலேயே ஊர்களுக்கு செல்லும் போது பஸ் ஓட்டுநர்கள் நிறுத்தும் உணவகத்தில் அவர்களுக்கான சிறப்பு சாப்பாடு மற்றும் பயணிகளுக்கு மோசமான சாப்பாடு வழங்குவதை தட்டி கேட்பதில் இருந்தே கதை சூடு பிடிக்கிறது..


சென்னை யில் பரபரப்பாக இயங்கி வரும் வங்கி ஒன்றில், டைம் பாம் ஒன்றினை காட்டி அதில் இருந்து படம் துவங்க, அந்த வங்கியை கொள்ளையடிக்க ஒரு குழு திட்டமிடும் வேளையில்…ஓய்வு பெற்ற அதிகாரியான சங்கர நாராயணன் (ராமராஜன்) வங்கிக்குள் நுழைந்து சாவகாசமாக பெட்டியில் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து, மிரட்ட, வங்கி மேனேஜர் வீட்டில் ஒருவரும், துணை மேனேஜர் வீட்டில் ஒருவருமாக மூவரும் இணைந்து வங்கிக்கு எதிரான போராட்டத்தை நடத்துகின்றனர்.. ஏன்?? அதற்கு காரணம் என்ன? என்பது தான் சாமானியன் படத்தின் கதை…


ராமராஜன் தனது மிரட்டும் விழிகளோடு, வயோதிகம் ஒரு பக்கம் இருந்தும், வேட்டியை மடித்துக் கட்டி, நின்ற இடத்தில் இருந்தே எதிரிகளை பந்தாடுகிறார்.. ரா சேர்ந்து அவருக்கு பக்க பலமாக எம். எஸ்.பாஸ்கர் மற்றும் ராதா ரவி அவர்கள் பங்கிற்கு ஏற்ப சிறப்பாக நடிசிருக்காங்க…


ராம ராஜனின் மகளாக வரும் நக்ஷா சரன் காதல், அப்பா மகள் பாசம் காட்டுவதில் இருந்து பிரச்சினைகளை எதிர்கொண்டு உயிரை மாய்த்துகொள்வது வரை நடிப்பு சிறப்பு…


இளையராஜாவின் இசை மற்றும் பாடல்கள் எல்லாமே படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. சில சர்ப்ரைஸ் களோடு, ராமராஜன் ரசிகர்களுக்கான செம ட்ரீட் படமாக இந்த சாமானியன் வந்திருக்கு…


அருள் செல்வன் தனது ஒளிப்பதிவால் கிராமத்தை அத்தனை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்….


மொத்தத்தில் இயக்குநர் ராஹேஷ், ராமராஜனை வைத்து ஒரு நல்ல படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். ராமராஜன் ரசிகர்களுக்கு, இது ஒரு மாஸ் படமாக இருக்கும்..

0 comments:

Pageviews