எலெக்சன் திரை விமர்சனம்

 வாணியம்பாடி அருகே, அரசியல் கட்சியொன்றில் கொள்கைப் பிடிப்புள்ள தொண்டனாக இருக்கிறார் ஜார்ஜ் மரியன். அவருக்கு நேரும் அவமானத்தை துடைப்பதற்காகத் தேர்தலில் நிற்கும் அவருடைய மகன்  விஜய் குமார், தேர்தலில் வென்றாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


மிகவும் அழகான கதையை கையில் எடுத்து அதில் திறம்படவும் நடித்து அசத்தியிருக்கிறார் நாயகன் விஜய்குமார். சில இடங்களில் நீண்ட வசனத்தை பேசி தனது திறமையை அழகாகவே நிரூபித்திருக்கிறார். நாயகி ப்ரீத்தி அஸ்ரா, தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவாக செய்து முடித்திருக்கிறார். க்யூட்டான சில எக்ஸ்ப்ரஷன்களைக் கொடுத்து கதைக்கேற்ற கதாபாத்திரமாக மாறியிருக்கிறார். ஜார்ஜ் மரியான் தனது அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து பவல் நவகீதன் மற்றும் திலீபன் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்து தங்களது கேரக்டர்களை நிவர்த்தி செய்திருக்கிறார்கள்.


கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சியில் நன்றாகவே வேலை செய்திருக்கிறது.


உள்ளாட்சி அமைப்பு, அதை சுற்றி நடக்கும் அரசியல், கட்சிகளுக்கு இடையிலான உள்ளடி வேலைகள் ஆகியவற்றை தைரியமாக பேசிய இயக்குனரை பாராட்டலாம்.

0 comments:

Pageviews