இங்க நான் தான் கிங்கு திரை விமர்சனம்

 

மேட்ரிமோனியல் அலுவலகத்தில் வேலை செய்யும் சந்தானத்திற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை வருகிறது. ஆனால் சொந்த வீடு இருந்தால் தான் பெண் கொடுப்போம் என்று பெண் வீட்டார்கள் கூறும் நிலையில் 25 லட்சம் கடன் வாங்கி அபார்ட்மெண்ட் வீடு வாங்குகிறார். திருமணம் செய்ய போகும் பெண்ணிடம் இருந்து 25 லட்சம் வரதட்சணையாக வாங்கி வீட்டுக்காக வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட நிலையில் ஒரு ஜமீன்தான் குடும்பத்தைச் சேர்ந்த பெரும் பணக்கார பெண் ஒருவரை சந்தானத்திற்கு திருமண தரகர் காட்டுகிறார்.  பெண் பார்க்கும் படலம் முடிந்த பிறகு பெண்ணின் வீட்டினர் மூன்று நிபந்தனைகள் விதிக்கின்றனர். ஒன்று மாப்பிள்ளைக்கு சொந்தமாக வீடு இருக்க வேண்டும், இரண்டாவது அவர் அனாதையாக இருக்க வேண்டும், மூன்றாவது தங்களுடன் ஒரே குடும்பமாக வாழ தயாராக இருக்க வேண்டும் என்ற இந்த மூன்று நிபந்தனைக்கும் ஓகே சொல்லி ஜமீன்தார் மகளை சந்தானம் திருமணம் செய்து கொள்கிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர் நினைத்தது எதுவுமே நடக்காமல் எல்லாமே தலைகீழாக மாறுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை நகைச்சுவையாக சொல்லும் படம் தான் ’இங்கு நான் தான் கிங்கு’.


நாயகன் சந்தானம், தான் ஒரு காமெடி கிங் மேக்கர் என மீண்டும் இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். நாயகி ப்ரியாலயா அழகான நடிப்பை அளவாகவே கொடுத்து காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறார். பாலசரவணன், தம்பி ராமையா, மாறன், விவேக் பிரசன்னா என படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தனர்.


திரைக்கதையின் வேகம் படத்தினை அதிகமாகவே ஈர்க்க வைத்திருக்கிறது. இமானின் பின்னணி இசை மற்றும் ஓம் நாராயணின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக வந்து நிற்கிறது. குறைகள் சில இருந்தாலும் காமெடி அரட்டைகள் அரங்கம் முழுவது அதிர வைத்திருப்பதால் குறைகள் அனைத்தும் நிறைவாக மாறிவிடுகிறது.

0 comments:

Pageviews