ZEE5 தளம், 2024 இன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அதிரடி திரைப்படமான "கட்டேரா" படத்தை, பிப்ரவரி 9 அன்று ஓடிடி தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்வதாக அறிவித்துள்ளது !!


மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான "கட்டேரா" ZEE5 தளத்தில், பிப்ரவரி 9 அன்று டிஜிட்டல் ப்ரீமியர் செய்யப்படவுள்ளது !!

~ "கட்டேரா" திரைப்படத்தைப் பிப்ரவரி 9 முதல் ZEE5 இல் கன்னட மொழியில் கண்டு மகிழலாம் ~

~ தருண் சுதிர் இயக்கத்தில், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், உருவான "கட்டேரா" திரைப்படத்தில், பன்முக நட்சத்திரம் தர்ஷன் தூகுதீபா மற்றும் அறிமுக நடிகை ஆராதனா ராம் ஆகியோருடன் ஜெகபதி பாபு, குமார் கோவிந்த், வினோத் குமார் ஆல்வா, டேனிஷ் அக்தர் சைஃபி மற்றும் ஸ்ருதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, கன்னட ப்ளாக்பஸ்டர் ஆக்‌ஷன் படமான "கட்டேரா" பிப்ரவரி 9 அன்று உலக டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இந்தப் படம் கன்னட மொழி பார்வையாளர்கள் அனைவரும் அணுகும் வகையில், பரந்த அளவிலான பார்வையாளர்களுக்கு வழங்கப்படும். "கட்டேரா" திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து உற்சாகமான விமர்சனங்களைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. கன்னடத்தில் பிரத்தியேகமாக வெளியிடப்பட்ட இப்படம் பார்வையாளர்களிடமிருந்து அபரிமிதமான வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 100+ கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் கன்னட படத்தினை பிப்ரவரி 9 முதல், கன்னடத்தில் ZEE5 இல் கண்டுகளிக்கலாம். 

1970 களின் காலகட்டத்தில் வாழ்ந்த, ஒரு திறமையான ஆயுதத் தொழிலாளியான தர்ஷன் தூகுதீபாவின் அசாதாரண பயணத்தை விவரிக்கிறது இப்படம், அவர் உழவர்களுக்கு உரிமை வழங்கும் நிலச் சீர்திருத்தச் சட்டத்தை செயல்படுத்துவதில், விவசாயிகளுக்கு உதவுவதற்கான வலிமையான பணிகளை மேற்கொள்கிறார். ஒற்றை மனிதனாக கட்டேரா (தர்ஷன் ) அத்தியாவசியமான சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக, தனது தேடலில் பல சவால்களை எதிர்கொள்கிறார். விவசாயப் போராட்டங்களின் பின்னணியில், தங்களின் வாழ்க்கையை மாற்றப் போராடும் மக்களின் கதையை, இந்தப் படம் மனதைத் தொடும் நெகிழ்ச்சியுடன் சொல்கிறது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ள இப்படத்தை, தருண் சுதிர் இயக்கியுள்ளார். இப்படத்தில் பன்முக நட்சத்திரம் தர்ஷன் தூகுதீபா மற்றும் அறிமுக நடிகை ஆராதனா ராம் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர், இவர்களுடன் ஜெகபதி பாபு, குமார் கோவிந்த், வினோத் குமார் ஆல்வா, டேனிஷ் அக்தர் சைஃபி மற்றும் ஸ்ருதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில்.., “இயக்குநர் தருண் சுதிர் மற்றும் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அபாரமான திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜகபதி பாபு, குமார் கோவிந்த், வினோத் ஆல்வா, அவினாஷ், வைஜநாத் பிரதார், மற்றும் ஸ்ருதி உள்ளிட்ட எங்களின் மற்ற முக்கிய நடிகர்களின் சிறப்பான நடிப்பில், "கட்டேரா" திரைப்படம் ஒரு சிறந்த மாஸ் என்டர்டெய்னராக அமைந்தது. இந்நேரத்தில் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பத்திலிருந்தே, இந்தப்படத்தின் முதன்மைப் பாத்திரத்திற்கு தர்ஷன் சரியான பொருத்தம் என்று நம்பினேன். இப்பாத்திரத்திற்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு, உழைப்பு மிகப்பெரியது. கதையையும் அதன் வலிமைமிக்க கதாபாத்திரங்களையும், நாங்கள் ரசித்ததைப் போலவே, பார்வையாளர்களும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்."

இயக்குநர் தருண் சுதிர் கூறியதாவது.., "அசாத்தியமான திறமையாளர் தர்ஷனுடன் ஒரு அருமையான படைப்பில், இணைந்து பணியாற்றியது உற்சாகமிக்க பயணமாக இருந்தது. திரையரங்குகளில் "கட்டேரா" படத்திற்குக் கிடைத்த வெற்றி கற்பனைக்கு அப்பாற்பட்டது. திரையரங்குகளைக் கொண்டாடக் காலத்திற்கு கூட்டிச் சென்றது இப்படம். தர்ஷனின் தீவிர ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என இருவரையும் இப்படம் மகிழ்வித்துள்ளது. ZEE5 இல் டிஜிட்டல் பிரீமியர் மூலம், இந்த சக்திவாய்ந்த கதை, இப்போது இன்னும் பரந்த பார்வையாளர்களைச் சென்றடையும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அற்புதமான நட்சத்திரங்களின் நடிப்பில், மிகச்சிறந்த கமர்ஷியல் படைப்பான இப்படத்தை, உலகளாவிய பார்வையாளர்கள் கொண்டாடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."

~ ரசிகர்கள் "கட்டேரா" திரைப்படத்தைப் பிப்ரவரி 9 முதல் ZEE5 இல் கன்னட மொழியில் கண்டு மகிழலாம்

0 comments:

Pageviews