லால் சலாம் விமர்சனம்

 

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மூரார்பாத் என்ற கிராமத்தில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இவர்களை பிளவுப்படுத்த நினைப்பவர்கள், அதற்காக அந்த ஊர் இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு பிடித்த கிரிக்கெட் விளையாட்டை பயன்படுத்தி ஊரில் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.

லால் சலாம் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.அவர் வரும் காட்சிகள் அனைத்தும் அனல் பறக்கிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் தங்களது கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்துள்ளனர். செந்தில் மற்றும் தம்பி ராமையா இருவருக்கும் வலுவான கதாபாத்திரம் தான். கடவுளை பற்றிய புரிதலை தரமான வசனங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு. ஏ.ஆர். ரஹ்மானின் இசை இன்னொரு பலம். 

மதத்தை வைத்து மக்களை பிளவுப்படுத்த நினைப்பவர்களுக்கும்  மற்றும் பேசுபவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கும் வசனங்கள் கைதட்டல் பெறுவதோடு, குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

0 comments:

Pageviews