Marakkuma Nenjam Movie Review

நடிகர்கள் : ரக்‌ஷன், மலினா, தீனா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், முத்தழகன், மெல்வின், முனீஷ்காந்த்,

இசை : : சச்சின் வாரியர்

இயக்கம் : இரா கோ யோகேந்திரன்

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார்

கன்னியாகுமரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரக்‌ஷன், தனது வகுப்பு மாணவி மலினாவை காதலிக்கிறார். தனது காதலை கடைசிவரை சொல்லாமல் பள்ளி படிப்பை முடிக்கிறார். ரக்‌ஷனுக்கு தான் படித்த பள்ளியின் ஞாபகம் அடிக்கடி வந்து செல்கிறது. குறிப்பாக, பள்ளியில் தன்னோடு படித்த மலினாவுடனான காதல் நினைவாகவே இருக்கிறார்.

இந்த நிலையில், அந்த பள்ளிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், 2008 ஆம் ஆண்டு அந்த பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி செல்லாது என்றும், அப்போது தேர்வு எழுதிய மாணவர்கள் தற்போது மீண்டும் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும், என்றும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது

இதனால் மீண்டும் அந்த மாணவர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அந்த மாணவர்களின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற நிலை வருகிறது. இதனால் வேறு வழி இல்லாமல் ரக்‌ஷன் உட்பட அவருடன் படித்த அனைவரும் பள்ளிக்கு மீண்டும் வருகிறார்கள்.

பள்ளிக்கு செல்லும் ரக்‌ஷன் இந்த முறை எப்படியாவது தனது காதலை மலினாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிறார் இறுதியில் ரக்ஷன் தனது காதலை மலினாவிடம் சொன்னாரா? இல்லையா? எனபதே ’மறக்குமா நெஞ்சம்’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக ரக்‌ஷனுக்கு முதல் படம் என்பதால், தனது காட்சிகள் ஒவ்வொன்றும் மெனக்கெடல் செய்தே நடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரி, இளைஞர் என அனைத்து பருவ நிலைக்கு ஏற்றவாறு நடிப்பை சரியாக கொடுத்து பாராட்டு பெறுகிறார். தீனா, ராகுல் ஆகியோரின் கதாபாத்திரங்கள் சிரிக்க மற்றும் சிந்திக்கும் வகையில் இருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் மலினா எளிய அழகு அளவான நடிப்பு என சரிசமமாக கொடுத்திருக்கிறார். உயிர் கொடுத்திருக்கிறார். ரக்‌ஷனுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது. முனீஸ்காந்த் காட்சிகள் படத்திற்கு பலம்

இசையமைப்பாளர் சச்சின் வாரியரின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை கதைக்கு ஏற்ற சரியான தேர்வாகி உள்ளது. ஒளிப்பதிவாளர் கோபிதுரைசாமி கன்னியாகுமரி சுற்றுவட்டாரப்பகுதிகளின் கொள்ளை அழகை அழகாக படமாக்கியிருக்கிறார்.

பள்ளிப்பருவம் காதலை எளிய முறையில் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராகோ யோகேந்திரன், மறக்குமா நெஞ்சம். படத்தை முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார். மேலும் பள்ளி கால நினைவுகளை மீண்டும் நினைவூட்டும் விதமாக நிறைய காட்சிகளை உருவாக்கி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.



0 comments:

Pageviews