பிப்ரவரி-9ஆம் தேதி வெளியாகிறது இமெயில்

 

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். 


மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ , அக்ஷய் ராஜ், ஆரஞ்சு மிட்டாய் பிரபா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். 


சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களில் நடக்கும் மோசடிகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. 


  தமிழ், கன்னடம் என இருமொழிகளிலும்... தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் 

உலக அளவில் 250  திரையரங்குகளில்மிகப் பிரம்மாண்டமாக பிப்-9 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. 


"ஆக்சன்...கண்ணுக்கு விருந்தான பாடல் காட்சிகளை அதிக பொருட் செலவில் எடுத்துள்ளது மக்களை ஈர்க்கும்" எனக் கூறினார் இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ். ஆர். ராஜன். 


தொழில்நுட்பக் கலைஞர்கள்


தயாரிப்பு ; SR பிலிம் பேக்ட்ரி 


நிர்வாக தயாரிப்பு  ; விக்னேஷ் (A) சமீர் – விஷ்ணுபிரசாத் - அஜித்குமார்


டைரக்சன் ; S.R.ராஜன்


இசை (பாடல்கள்) ; அவினாஷ் கவாஸ்கர் 


பின்னணி இசை ; ஜுபின்


ஒளிப்பதிவு ; செல்வம் முத்தப்பன்


படத்தொகுப்பு ; ராஜேஷ் குமார்


கலை ; கோபி ஆனந்த்-கேஜிஎப் ஷியாம்-மஞ்சு 


பாடல்கள் ; அன்புசெழியன்-விஷ்ணு ராம்


ஸ்டண்ட் ; மாஸ் மாதா 


மக்கள் தொடர்பு ; A.ஜான்

0 comments:

Pageviews