அயலான் விமர்சனம்

 

வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு சிதறிய அதிசக்திவாய்ந்த பொருள் ஒன்று பணத்தாசை பிடித்த பெரிய தொழில் அதிபரிடம் கிடைக்கிறது. அதை வைத்து உலகின் மிகப் பெரிய எரிசக்தி உற்பத்தி மூலமாக மாற நினைக்கும் வில்லனிடமிருந்து அந்த சக்திவாய்ந்த பொருளைத் தேடி பூமிக்கு வருகிறது ஏலியன். அதை மீண்டும் ஏலியன் கொண்டு சென்றதா இல்லையா? அதற்கு சிவ கார்த்திகேயன் எப்படி உதவுகிறார்? என்பதே அயலான் திரைப்படத்தின் கதை.நடிகர்கள்சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமல்லாமல் ஆக்‌ஷனிலும் கலக்கியிருக்கிறார். ஏலியனுடன் சேர்ந்து சண்டையிடும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். ராகுல் ப்ரீத் சிங் அழகாக வந்து கவர்ந்துள்ளார்.யோகிபாபு, கருணாகரன் கூட்டணியில் காமெடியும் கைக்கொடுத்துள்ளது. ஏலியனுக்கு சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இவரின் குரல் குழந்தைகளை கவரும் விதமாக அமைந்துள்ளது.


நிரவ்ஷாவின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் கண்களுக்கு விருந்து படைப்பது போல், ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டுகிறது.  


ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. 


அறிவியல் பூர்வமான கதையை கமர்ஷியல் ஃபார்முலாவோடு இயக்கியிருக்கும் ஆர்.ரவிகுமார், அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக மட்டும் இன்றி புரியும் படமாகவும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். 


இந்தப் பொங்கலுக்கு குடும்பங்கள் கொண்டாடும் படமாக அயலான் இருக்கும்.

0 comments:

Pageviews