மிஷன் சாப்டர் 1 விமர்சனம்

 

உயிருக்கு ஆபத்தான தனது குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்லும் குணசேகரன் (அருண் விஜய்) அங்கு ஒரு எதிர்பாராத சண்டையினால் சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டை சீர்குலைப்பதற்காக சிறையில் இருக்கும் தீவிரவாதிகளைக் காப்பாற்ற முயல்கிறார் வில்லன். தொடக்கத்தில் சிறையிலிருந்து தப்பிக்க முயற்சித்தாலும் வில்லனின் நோக்கம் அறிந்ததும் தீவிரவாதிகளைத் தப்பிக்க விடாமல் சிறை அதிகாரியான எமி ஜாக்சனுடன் சேர்ந்து போராடுகிறார் அருண்விஜய். தீவிரவாதிகள் தப்பித்தனரா? இல்லையா? வில்லனுக்கும், அருண் விஜய்க்கும் என்ன தொடர்பு? அருண் விஜய் மகளின் சிகிச்சை என்ன ஆனது? என்பதுதான் மிஷன் திரைப்படத்தின் கதை.


மகளின் உயிரை காப்பாற்ற போராடும் ஒரு எளிமையான தந்தையாக அறிமுகமாகி ரசிகர்களை ஈர்க்கும் அருண் விஜய், லண்டன் சிறைச்சாலையில் எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரம் பிரமிக்க வைகிறது. ஒவ்வொரு காட்சியிலும் மிக கடுமையான உழைப்பை கொடுத்திருப்பவர், பல ஆக்‌ஷன் காட்சிகளை ரியலாக செய்து அசத்தியிருக்கிறார். சிறைச்சாலை அதிகாரியாக நடித்திருக்கும் எமி ஜாக்சன் அதிரடி காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

நிமிஷா சஜயன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். அருண் விஜய்யின் குழந்தை பேசும் எமோஷனல் வசனங்கள் உருக வைக்கிறது. 


ஒளிப்பதிவு சந்தீப் கே.விஜயன்.அவர் திறமைக்குச் சவால்விடும் திரைக்கதை மற்றும் சண்டைக்காட்சிகள். அவற்றைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்துள்ளன. பின்னணி இசையிலும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார். படத்தொகுப்பாளர் ஆண்டனி உழைப்பு படத்துக்குக் கைகொடுத்து இரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறது. காதல் படங்கள் உணர்வுப்பூர்வமான படங்கள் மட்டுமின்றி அதிரடி ஆக்சன் படத்தையும் சிறப்பாகக் கொடுக்கமுடியும் என்று காட்டியிருக்கிறார் இயக்குநர் விஜய்.


0 comments:

Pageviews