டங்கி விமர்சனம்

 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்து நாட்டில் மனித வளம் குறைந்ததால், பிற நாட்டு மக்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். இதை பயன்படுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பலர் இங்கிலாந்து நாட்டுக்கு வேலைக்காக செல்கிறார்கள். அந்த வகையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த டாப்ஸி பண்ணு மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் பொருளாதார பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் அதற்கான தகுதி இல்லாததால் அவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது. இதனால், போலியான முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறும் டாப்ஸி மற்றும் அவரது நண்பர்களை முன்னாள் ராணுவ வீரரான ஷாருக்கான், டங்கி வழி என்று சொல்லக்கூடிய சட்டவிரோதமான முறையில் இங்கிலாந்து நாட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அப்படி செல்லும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?, அவர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு சென்றார்களா? இல்லையா? என்பது தான் ‘டங்கி’ படத்தின் மீதிக்கதை.


டன்கி படத்தில் நட்பு, காதல், சிரிப்பு, அழுகை, நெகிழ்ச்சி என அனைத்தும் இருக்கிறது. இது ஒரு அக்மார்க் ராஜ்குமார் ஹிரானி படம்.


ஷாருக்கான் தனக்கு கொடுத்த வேலையை அழகாக செய்திருக்கிறார். இளம் வயது ஹர்தயாள், வயதான தோற்றத்திலும் அசத்துகிறார். 


மனுவாக டாப்ஸி நம்மை கவர்கிறார். மனு, ஹர்தயாள் இடையேயான காதல் காட்சி தியேட்டரில் இருப்பவர்களை கவர்கிறது. விக்கி கௌஷல் சிறிது நேரமே வந்தபோதிலும் மனதில் இடம் பிடித்துவிடுகிறார்.


அனில் குரோவர், விக்ரம் கொச்சார் ஆகியோரின் நடிப்பும் அற்புதம். ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.


0 comments:

Pageviews