Kuiko Movie Review
நடிகர்கள்: விதார்த், யோகிபாபு, துர்கா, ஸ்ரீ பிரியங்கா, இளவரசு
இசை: அந்தோணி தாசன்
இயக்குமர் : அருள் செழியன்
மக்கள் தொடர்பு : சதிஷ் குமார்
தனியார் டுடோரியலில் கணக்கு வாத்தியாராக வேலை பார்க்கும் விதார்த்திற்கு சில காரணங்களால் வேலை பறிபோகிறது. இந்நிலையில் சென்னையில் நடக்கும் IPL மேட்ச் பார்ப்பதற்காக தன் மாமாவிடம் பணம் கேட்க செல்கிறார். இதனிடையே சவுதியில் அரச குடும்பத்தின் ஒட்டகங்களை மேய்க்கும் வேலை பார்ப்பவர் யோகிபாபு. அவரது அம்மா செங்கம் அடுத்த ஒரு மலைகிராமத்தில் இறந்து போகிறார். ...
சவுதியில் இருந்து வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும் என யோகிபாபு கூற, இறந்த அம்மாவை ஐஸ் பெட்டியில் வைக்க ஏற்பாடு நடக்கிறது. அவரை வைப்பதற்கான ஐஸ் பெட்டி விதார்த்தின் மாமா கடையில் எடுக்கிறார்கள்.சில பிரச்ச்னைகளால் விதார்த் அந்த ஐஸ் பெட்டியை கிராமத்திற்கு எடுத்து செல்கிறார் . இதனையடுத்து விதார்த்,அதே கிராமத்தில் சில நாட்கள் தங்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
சவுதியில் இருந்து வரும் யோகி பாபு அம்மாவின் உடலை தகனம் செய்து முடிக்கிறார். அதோடு அம்மாவின் உடலை சில நாட்கள் பாதுகாத்து வைத்த அந்த ஐஸ் பெட்டியை விலைக்கு வாங்கி அதை 'குடியிருந்த கோயில்' ஆக பாவித்து தனி அறையில் வைத்து வணங்கி வருகிறார். இந்நிலையில் அந்த ஐஸ் பெட்டி காணாமல் போகிறது. இறுதியில் காணாமல் போன ஐஸ் பெட்டி கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகிபாபு இருவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை மிக அழகாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்திருக்கிறார்கள். கணக்கு வாத்தியாராக வரும் விதார்த் முதல் பாதி முழுவதும் தனது யதார்த்த நடிப்பால் கவர்கிறார். சவுதியில் அரச குடும்பத்தின் ஒட்டகலாய் மேய்ப்பவராக வரும் யோகிபாபு இரண்டாம் பாதியை தன் கலகலப்பான பேச்சால் தாங்கி பிடிக்கிறார். செண்டிமெண்ட், காமெடி என அனைத்தையும் சரியான முறையில் கையாண்டு இருக்கிறார்.
ஸ்ரீபிரியங்கா, துர்கா என படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருவரும் கதாபத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள் இவர்களுக்கு கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.. இளவரசு, முத்துக்குமார், வினோதினி வைத்தியநாதன் என படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் .
இசையமைப்பாளர் அந்தோணி தாசனின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம். சேர்க்கிறது. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அதன் தன்மை மாறாத வகையில் படமாக்கியிருக்கிறார்.
எளிமையான கதையை கிராமத்தில் நடக்கும் ஒரு சில காமெடி சம்பவங்களை வைத்து ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியிருக்கிறார். இயக்குனர் அருள் செழியன் . கந்துவட்டிக்காரர்,, ஃப்ரீசர்பாக்ஸ் திருட்டு உட்பட எல்லாவற்றிற்குள்ளும் நகைச்சுவையை வைத்து அழகான கிராமத்து படத்தை கொடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
0 comments:
Post a Comment