80s Build up Movie Review

Starring: Santhanam, Preethi Radhika, KS Ravikumar, Ananda Raj, Redin Kingsley

Directed by  S Kalyan
Produced by Studio Green , KE Gnanavel Raja

Music Ghibran 

Pro Sathish Kumar

80 காலகட்டங்களில் நடக்கிற கதை  ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த சந்தானம் .தீவிர கமல்  ரசிகராக வருகிறார் இவருடைய தாத்தா ஆர் .சுந்தர்ராஜன்  தீவிர ரஜினி ரசிகராக இருக்கிறார்.  இவர்கள் வீட்டில் புதையல் ஒன்றின் வரைபடம் இருப்பதை அறிந்துக்கொள்ளும் மன்சூர் அலிகான், அதை கைப்பற்ற முயற்சிக்க, அவரிடம் இருக்கும் வைரக்கற்களை  கல்கண்டு என நினைத்து  சாப்பிட்டு இறந்து போகிறார்  ஆர் .சுந்தர்ராஜன்

இந்த வைரங்களை எடுப்பதற்காக மன்சூர் அலிகான் தன்  குழுவுடன்  ஜமீன் வீட்டிற்குள் வருகிறது. இதனையடுத்து , தாத்தாவின் இறப்பிற்கு வரும் தனது உறவுக்கார பெண்ணான நாயகி ராதிகா ப்ரீத்தியை பார்த்ததும் காதல் வயப்படும் சந்தானம் ஒரே நாளில் ராதிகா ப்ரீத்தியை காதலில் விழ வைக்கிறேன் என்று  தங்கை சங்கீதாவிடம் சவால் விடுகிறார்.  இறுதியில் சந்தானம் சவாலில் ஜெயித்தாரா?, இல்லையா?  மன்சூர் அலிகானின் குழு  தாத்தா வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுத்தார்களா?, இல்லையா?  என்பதே ’80ஸ் பில்டப்’  படத்தின் மீதிக்கதை.

கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தானம்  கமலின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார்   இந்த படத்திலும் முழுக்க முழுக்க காமெடிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இறப்பு வீட்டில் நடக்கும் காமெடி கலாட்டாவை கனகச்சிதமாக கையாண்டிருக்கும் சந்தானம்,  காதல், குறும்பு,ஆக்‌ஷன், செண்டிமென்ட் என அனைத்துயும்  தனக்கே  உரிய பாணியில் கொடுத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ராதிகா ப்ரீத்தி பாவாடை தாவணியில் அழகு தேவதையாக வருகிறார். கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். நடிப்பு , நடனம் என அனைத்தையும் சரியாக செய்திருக்கிறார். இவருக்கு இது முதல்படம் போல இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார்.

சந்தானத்தின் தங்கையாக நடித்திருக்கும் சங்கீதா நடிப்பு,  முக பாவனை, உடல் மொழி என அனைத்தும் கவனிக்க வகையில் இருக்கிறார்..சந்தானத்துடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். சந்தானத்தின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன் மற்றும் பெண் வேடம் போட்டு ஜமீன்  வீட்டுக்குள் நுழையும் ஆனந்தராஜ் இருவரின் காமெடி படத்திற்கு மிகப்பெரிய பலம்.

ஆர்.சுந்தரராஜன்,ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான்,தங்கதுரை, கே.எஸ்.இரவிகுமார், முனீஸ்காந்த், கிங்ஸ்லி, மொட்டை  ராஜேந்திரன் என படத்தில் நடித்த னைவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்

இசையமைப்பாளர் ஜிப்ரான்  இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையான மொலோடியாக உள்ளது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.  ஒளிப்பதிவாலர் ஜேக்கப் ரத்தினராஜ், வியக்க வைக்கும் விதத்தில் காட்சிகளை காலக்கட்டத்திற்கு ஏற்ப மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்

முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்   இயக்குநர் கல்யாண், இந்த படம்  நகைச்சுவை மற்றும் பொழுது போக்கை விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் நல்ல  விருந்தாக இருக்கும்.


0 comments:

Pageviews