ஸ்ட்ரைக்கர் விமர்சனம்

 

ஜே எஸ் ஜே சினிமாஸ் மற்றும் ஏ எஸ் வி கிரியேஷன்ஸ் சார்பில் ஜஸ்டின் விஜய் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, வித்யா பிரதீப், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் , கஸ்தூரி, அபிநயா ஷங்கர் நடிப்பில் எஸ் ஏ பிரபு இயக்கி இருக்கும் படம். 


நவீன முறையில் ஆவிகளோடு பேசும் பயிற்சிக் கூடத்தில் பயிலும் ஒருவனுக்கும் ( ஜஸ்டின் விஜய்), அவனைத் தனது யூ டியூபுக்காக பேட்டிகாண வரும் பெண்ணுக்கும் ( வித்யா பிரதீப்)  சிநேகம் ஏற்பட, இருவரும் செத்துப் போன ஒருவரின் ஆவி இருக்கும் வீட்டுக்குள் அந்த ஆவியுடன் பேசப் போகிறார்கள் .

ஆவிப் பயிற்சியாளர் ( கஸ்தூரி)  கொடுக்கும் அறிவுரைகளை மீறி அவர் இயங்க ஆவி கடுப்பாகிறது . 


கடைசியில் இது எல்லாமே ஆவியுடன் பேச வந்தவருக்கு வைக்கப்பட்ட குறி .ஏன் என்ன எதுக்கு என்பதே படம். 


ஆரம்பத்தில் அஷ்டமா சித்திகள் பற்றி எல்லாம் ஆற அமர சொல்கிறார்கள் . ஆனா எதுக்கு இந்தப் படத்துக்கு என்று படம் முடியும்போது தோன்றும். 


ஒரு வீட்டுக்குள் ஒரு பொருளைத் தேடுவது என்றால் இருக்கிற எல்லா அலமாரி, மேஜை , டிராயர் எல்லாவற்றையும் திறந்து மூடித் தேடுவதை காட்டிக் கொண்டே ஏ ஏ ஏ … இருக்கிறார்கள் .


இத்தனைக்கும் படம் ஓடுவது என்னவோ ஒன்றரை மணி நேரம்தான் 


கிளைமாக்ஸ் திருப்பம் ஓகே . ஆனால் இயக்கம் நடிப்பு இவற்றில் இருக்கும் போதாமை பெரிய பலவீனம் . 

0 comments:

Pageviews