துடிக்கும் கரங்கள் விமர்சனம்

 

காவல் துறை அதிகாரியான IG தேவராஜின் மகள், கடற்கரை ஓரமாக அவரின் காரிலேயே இறந்து கிடக்கிறார். இதனை அறிந்த IG தேவராஜ் இந்த கொலைக்கு பின்னணி என்ன? யார் காரணம்? என தேட ஆரம்பிக்கிறார். அதேபோல் அவரின் நண்பர் சமீர் அவர்களும் திடீரென்று காணாமல் போகிறார். சமீரின் அப்பா ஊரிலிருந்து வந்து சமீரை தேடிக்கொண்டிருக்கிறார். கதையின் நாயகன் விமல் கொத்து பரோட்டா என்ற யூடுயூப் சேனலை வைத்திருக்கிறார், அதில் அன்றாட வாழ்வில் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை பதிவிடுவார். சமீரின் அப்பா விமலை எதார்த்தமாக சந்திக்கிறார், அவரின் பிரச்சனைகளையும் கூறுகிறார். அதனை ஒரு வீடியோவாக விமல் தனது யூடுயூப் சேனலில் பதிவிட, வீடியோ வைரலாகிறது. பிறகு சமீர் இறந்துவிட்டார் என்றும் தெரியவருகிறது, இதற்கடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதும், இதனை செய்தது யார்? என்பதே படத்தின் மீதி கதை.


முதல் முறையாக ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் படத்தில் விமல் நாயகனாக நடித்திருக்கிறார். ஆனால், இந்த கதையில் அவர் வழக்கமான பாணியிலேயே நடித்திருப்பதை தவிர்திருக்கலாம். படம் முழுவதும் மாடர்ன் உடையில் யூத்தாக வலம் வந்தாலும், உடல் மொழியில் எந்தவித மாற்றமும் இன்றி அதே பழைய விமலாகவே வருகிறார். காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்திலும் நாம் ஏற்கனவே பார்த்த விமல் தான் என்றாலும், ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் சற்று புதிய விமலாக ரசிக்க வைக்கிறார்.


ஐஜி-மகளின் கொலையில் தொடங்கும் படம் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் பயணிக்க வைத்து விடுகிறது. அதை தொடர்ந்து படம் பரபரப்பாக நகர்ந்தாலும், காதல் காட்சிகளால் பல இடங்களில் நொண்டியடிக்க செய்கிறது. அதே சமயம், தங்கைக்காக போலீஸ்காரரையே விமல் பந்தாடும் காட்சிகள் காதல் காட்சிகளினால் ஏற்பட்ட தொய்வை மறந்து ரசிகர்களை கைதட்ட வைக்கிறது.


 ஐஜி மகளின் கொலையில் இருக்கும் மர்மத்திற்கு பின்னணியில் இயக்குநர் வைத்திருக்கும் ட்விஸ்ட் எதிர்பார்க்காத ஒன்றாக இருப்பதோடு, அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக்கொள்ள செய்கிறது. 

0 comments:

Pageviews