வாழ்வு தொடங்கும் இடம் நீதானே விமர்சனம்

 

தரங்கம்பாடி அருகே ஒரு ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷகிரா. இவரின் வீட்டிற்கு திருச்சியில் இருந்து மார்டனாக வினோதா என்ற பெண் வருகிறார். சினிமா எடுப்பதற்காக இந்த பகுதிக்கு வந்திருப்பதாகவும், சில நாட்கள் இங்கு தங்கியிருக்க இருப்பதாகவும் கூறுகிறார் வினோதா.

தனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறிவிடுகிறார் ஷகிராவின் தந்தை. ஷகிராவும் வினோதாவும் ஒரே அறையில் தங்குகின்றனர். அந்த சமயத்தில் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த காதலை வினோதா ஷகிராவின் அப்பாவிடம் கூறுகிறார். இதனால், கோபம் கொண்ட இருவரையும் அடித்து விடுகிறார் ஷகிராவின் தந்தை. இந்நிகழ்வால், அவசரமாக ஷகிராவிற்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார். இறுதியில் ஷகிராவும் வினோதாவும் இணைந்தார்களா.? இந்த சமுதாயம் இவர்களை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.


ஷகிரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிரஞ்சனா நெய்தியார், வினோதா கதாபாத்திரத்தில் வரும் ஸ்ருதி பெரியசாமியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.  அந்த துணிச்சல் இருவருக்குமே இருக்கிறது என்பதை அவர்கள் நடித்திருக்கும் காட்சிகள் பறைசாற்றுகின்றன.


மொத்தத்தில் “வாழ்வு தொடங்கும் இடம் நீதானே” திரைப்படத்தின் படி, எல்லோருக்குமான வாழ்வு எங்கிருந்துனாலும் தொடங்கலாம், சிலரின் வாழ்வில் அது இப்படியும் தொடங்கலாம் என்பதை துணிச்சலாக பேசி இருக்கும் தைரியத்திற்காகவும்,  இது போன்ற வாழ்வியலை பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றியிருப்பதற்காகவும் இப்படத்தை கண்டிப்பாக பாராட்டலாம்.  கண்டிப்பாக பார்க்கலாம்.  

0 comments:

Pageviews