சந்திரமுகி 2 விமர்சனம்

 

தொழிலதிபரான சுரேஷ் மேனன், ராதிகா தம்பதியினர் குடும்பத்தில் அடுத்தது பிரச்சனைகள் வருகிறது. இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் பிரச்சினைகள் தீரும் என்று ஜோதிடர் சொல்ல, குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்திரமுகி உள்ள பங்களாவிற்கு செல்கிறார்கள். இவர்களுடன் ராதிகா மகளின் குழந்தைகளுக்கு பாதுகாவலராக இருக்கும் ராகவா லாரன்சும் சந்திரமுகி பங்களாவில் தங்குகிறார். இந்நிலையில் குலதெய்வ கோவிலை சுத்தம் செய்ய சென்ற இரண்டு பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதே சமயம் சந்திரமுகியின் ஆத்மா ராதிகாவின் மகளான லட்சுமி மேனன் உடலுக்குள் செல்கிறது. இதையடுத்து பல பிரச்சினைகள் அந்த பங்களாவில் நடக்கிறது. இறுதியில் சந்திரமுகியின் ஆத்மா லட்சுமி மேனனை விட்டு சென்றதா? சந்திரமுகியின் ஆத்மா ராதிகா குடும்பத்தை என்ன செய்தது? குல தெய்வ கோவிலில் ராதிகாவின் குடும்பத்தினர் வழிபாடு செய்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

நாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் வேட்டையனாக வீரத்தையும், பாண்டியனாக காமெடியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் தனக்கே உரிய பாணியில் நடனம், ரொமான்ஸ் என கலக்கி இருக்கிறார். கங்கனா ரனாவத் அழகு தேவதையாக ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சந்திரமுகியாக நடனம், பயம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். லட்சுமி மேனன் பாவமாகவும், சந்திரமுகி ஆத்மா புகுந்தவுடன் ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி அசர வைத்து இருக்கிறார். பணிப்பெண்ணாக வரும் மகிமா நம்பியார் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். சிருஷ்டி டாங்கே, ரவி மரியா உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். படத்திற்கு பெரிய பலம் வடிவேலுவின் நடிப்பு. தான் பயந்து ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக லாரன்ஸ் உடன் வடிவேலு பேசும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பு மழை. 


சந்திரமுகி முதல் பாகத்தில் இருந்த அரண்மனையில் ராதிகா குடும்பத்தினர் சென்ற பிறகு சந்திரமுகி ஆத்மாவால் ஏற்படும் பிரச்சினையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பி.வாசு. முதல் பாகத்தை போல இப்படத்தையும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி இருக்கிறார்.


இசை கீரவாணியின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது.பாடல்கள் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கவில்லை என்றாலும் இசை தூள் கிளப்புகிறது. ஆக மொத்தம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இந்த படம் ஓகே என்று சொல்லலாம்.

0 comments:

Pageviews