கொலை விமர்சனம்

 

படத்தில் மிகப் பிரபலமான மாடலாக லைலா இருக்கிறார். திடீரென்று ஒரு நாள் இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து இருக்கிறார். இந்த கேஸ் காவல்துறை அதிகாரியாக இருக்கும் ரித்திகா சிங்கிடம் வருகிறது. ஒரு வாரத்திற்குள் இந்த கேசை முடிக்க வேண்டும் என்று மேல் அதிகாரிகள் ரித்திகா சிங்குக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்கள். ரித்திகா சிங் விஜய் ஆண்டனியிடம் உதவி கேட்கிறார். ஆனால், விஜய் ஆண்டனி இந்த கேசை எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறுகிறார்.  இறுதியில் என்ன நடந்தது, எதற்காக லைலா கொலை செய்யப்பட்டார்? என்பதே படத்தின் மீதி கதை.


விஜய் ஆண்டனி எப்போதும் போல் தன் வழக்கமான நடிப்பையே இப்படத்திலும் வெளிப்படுத்தி இருக்கிறார். போலீசாக வரும் ரித்திகா சிங் தனக்குக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சில பல இன்வேஸ்டிகேஷன் காட்சிகளில் நிறைவாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார் மாடலாக வரும் மீனாட்சி சவுத்ரி. தனக்குக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.


இயக்குநர் பாலாஜி கே குமார். படத்தின் மேக்கிங், வித்தியாசமான காட்சி அமைப்புகள், நேர்த்தியான கேமரா ஆங்கிள்கள், தரமான பின்னணி இசை என ஒரு விண்டேஜ் ஹாலிவுட் கிரைம் திரில்லர் பட பாணியில் கொலை படத்தை உருவாக்கிக் கண்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். சிவக்குமாரின் கேமரா ஹாலிவுட் திரைப்படங்கள் போன்ற தரத்தை படத்துக்கு தருகிறது. கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் மேற்கத்திய பாணியில் நன்றாக உள்ளது.


0 comments:

Pageviews