நாசா யூத் ஹப்பின் இரண்டாவது கிளை இப்போது ஈ.சி.ஆரில் திறக்கப்பட்டுள்ளது

 

சென்னையில்  அமைந்துள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு ஹப்களிலேயே முதலாவது என்றால் திரு. நாசர் அவர்களால் துவங்கப்பட்ட நாசா யூத் ஹப் தான். அதனுடைய முதல் ஹப் 2017ல் எலியட் கடற்கரை சாலையில் துவங்கப்பட்டு இளைஞர்களின் மைய கவன ஈர்ப்பாக இருந்து வருகிறது. அதனுடைய முதல் கிளைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை அதன் இரண்டாவது கிளையை 21 ஜுலை 2023ல் வரவேற்றுள்ளது.  இந்த நிகழ்ச்சி தமிமுன் அன்சாரி மற்றும் டாக்டர் ஹபீப் நாதிரா ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது. மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஹாரத்தி கணேஷ், கணேஷ்கர், அஜய்ராஜ், உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது மதிப்புமிக்க வருகையால் இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.


இந்த நிகழ்வில் நடிகர் மிர்ச்சி சிவா பேசும்போது, “இந்த அற்புதமான கொண்டாட்டத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஹப்பின் நிறுவனரான நாசர் சார் என்னுடைய குடும்ப நண்பர். அவரது இந்த சாதனையை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் தனது அணுகுமுறையில் ரொம்பவே அப்டேட்டாக இருப்பதுடன் இளைஞர்களின் நாடித்துடிப்பையும் நன்கு தெரிந்து வைத்திருப்பதால் தான் இப்படி இங்கே ஒரு விளையாட்டு மண்டலம் அமைக்கும் யோசனையையும் செயல்படுத்தியுள்ளார்” என்றார்.


நடிகை ஹாரத்தி கணேஷ் பேசும்போது, “பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களுக்கு இரையாகிறார்கள். இந்த பொழுதுபோக்கு ஹப்பானது போதைப்பொருள் முறைகேடுகளில் இருந்து இளைஞர்கள் விலகி நிற்பதற்கு  புதுமையான மற்றும் பொழுதுபோக்கான வழியை காட்டுகிறது” என்றார். .


நடிகர்கள் பிரேம்ஜி அமரன் மற்றும் அரவிந்த் ஆகாஷ் இருவரும் தங்களது சிறபான வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பெசன்ட் நகரில் உள்ள நாசா யூத் ஹப் தங்களது பொழுபோக்கிற்காக பேவரைட் இடம் என்றும் இந்த அடுத்த கிளையும் அப்படித்தான் எங்களுக்கு இருக்கும் என்றும் கூறினர்.


இந்த நான்கு மாடிகள் கொண்ட ஹப் அதனுடைய ஆடம்பரமான உட்புறம், முழுவதும் கருப்பு நிறத்துடன் கூடிய, எட்டு பகுதிகளில் நியான் குழல்விளக்கு வெளிச்சங்களால் ஆன அவுட்லைன், விளையாட்டு பகுதிகள், விர்ச்சுவல் ரியாலிட்டி மண்டலம், குழந்தைகள் மண்டலம், ஸ்நூக்கர், பவுலிங், சிற்றுண்டியகம், புதிர் விளையாட்டுக்கள் கொண்ட தப்பிக்கும்

0 comments:

Pageviews