குட் நைட் விமர்சனம்
கதையின் நாயகனான மணிகண்டனுக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. அந்த பழக்கம் எந்த வரைக்கும் என்றால், அவர் விடும் குறட்டை சத்தம் பக்கத்து அறைக்கு மட்டுமல்லாது, பக்கத்து வீட்டு வரைக்கும் கேட்கும் வலிமையுடையது. இதனால், பலரும் இச்சத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழலில் இவருக்கு மீத்தா ரகுநாத்தோடு திருமணம் நடைபெறுகிறது. அதன்பிறகு மணிகண்டன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதை.
படத்தின் நாயகனாக இல்லாமல், கதையின் நாயகனாக கதையோடு ஒன்றி அக்கதாபாத்திரமாகவே மாறி அசத்தியிருக்கிறார் மணிகண்டன். மணிகண்டனுக்கும் ரமேஷ் திலக்குக்குமான காட்சிகள் திரையரங்கை கலகலப்பாக்கி விடுகின்றன. மணிகண்டன் – மீத்தா ரகுநாத் காட்சிகளும் அதிகமாகவே ரசிக்க வைத்திருக்கின்றன. அழகு தேவதையாக மட்டுமல்லாமல், காட்சிகளில் தனது நடிப்பையும் அழகாகவே கொடுத்து காட்சிகளை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார் மீத்தா ரகுநாத்.
பல படங்களுக்குப் பிறகு ரமேஷ் திலக்கிற்கு மிக முக்கியமான படமாகவும் இப்படம் அமையும். இவருக்கும் ரேச்சலுக்குமிடையேயான காட்சியமைப்பும் ரசிக்கும்படியாக அமைந்திருப்பது கதைக்கு கூடுதல் பலம். பாலாஜி சக்திவேல் படத்தின் ஓட்டத்திற்கு கூடுதல் பலம். ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பலம். இவரது பின்னணி இசை, கதையோடு நம்மை பயணம் புரிய வைத்திருக்கிறது. ஜெயந்த் சேதுமாதவனின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகூற கொடுத்திருக்கிறது.
படத்தின் திரைக்கதை நம்மை கதைக்குள் இழுத்துச் செல்லும் பெரும் கருவியாக aமைந்திருப்பது படத்திற்கு பெரும் பலம். காட்சியமைப்பு ஒவ்வொன்றும் ரசிக்கும்படியாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
குடும்பத்தோடு சென்று பார்க்கும் படமாக இந்த வாரம் வந்திருக்கும் சிறந்த படம் “குட் நைட்”
0 comments:
Post a Comment