சிறுவன் சாமுவேல் விமர்சனம்

 


சாமுவேலாக நடித்திருக்கும் அஜிதன் பள்ளியில் படித்து வரும் சிறுவன், இவனது பள்ளி நண்பனாக வருகிறான் விஷ்ணு. அஜிதனுக்கு கிரிக்கெட்டில் அளவு கடந்த நாட்டம். டிவியில் கிரிக்கெட் மேட்சை கண் இமைக்காமல் பார்ப்பதும், அப்பகுதியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினால் சென்று பார்ப்பதுமாக கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான் அஜிதன். தனக்கென்று கிரிக்கெட் பேட் ஒன்று வாங்க வேண்டும் என்று அஜிதனுக்கு ஆசை.. இந்த சூழலில், அஜிதன் ஒரு பொருளை திருட, அந்த பழியானது அவனது நண்பனான விஷ்ணு மீது விழுகிறது.

அதன்பிறகு விஷ்ணுவிற்கு என்ன ஆனது.? அஜிதன் தனக்கு பிடித்த கிரிக்கெட் பேட் வாங்கினானா ?? என்பதே படத்தின் மீதிக் கதை..


கன்னியாகுமரி மக்களின் வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்ததற்காகவே இயக்குனருக்கு பாராட்டுகளை அள்ளிக் கொடுக்கலாம். அதற்கான மெனக்கெடல், அப்பகுதி மக்களை வேலை வாங்கிய விதம், அவரின் உழைப்பு என காட்சிகளுக்கு காட்சி ஒரு உயிரோட்டத்தைக் கொடுத்து நம்மீ ரசிக்க வைத்து விட்டார். அதிலும், இரண்டாம் பாதியில் மனதை வருடும் காட்சிகளில் கண்களில் மட்டுமல்லாது இதயத்தில் இருந்தும் கண்ணீர் வர வைத்து விட்டார் இயக்குனர்.


கன்னியாகுமரியின் கண்கொள்ளா காட்சிகளை கண் முன்னே நிறுத்தி சிறுவர்களிம் கண்ணோட்டத்தை காண வைத்த ஒளிப்பதிவாளருக்கு நன்றிகள்..


எந்த இடத்தில் இசை வேண்டுமோ, அந்த இடத்தில் இசை கொடுத்து நம்மை மயக்கி விட்டார் இசையமைப்பாளர்..


அஜிதன் தவசிமுத்து மற்றும் விஷ்ணு இருவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியா குழந்தை நட்சத்திரங்களாக இனி நிச்சயம் ஜொலிப்பார்கள்.

0 comments:

Pageviews