மே 19 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் பிச்சைக்காரன் 2

 

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2 - ஆன்டி பிகிலி' டிரெய்லர் ஏப்ரல்29, 2023 அன்று வெளியாகி குறுகிய காலத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதன் மூலம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்டைலான காட்சிகள், நேர்த்தியான எடிட்டிங், 'பிச்சைக்காரன்' படத்திற்கான சிக்னேச்சர் இசை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, விஜய் ஆண்டனியின் பிரமிக்க வைக்கும் திரை பிரசன்ஸ் உட்பட எண்ணற்ற அற்புதமான ஃப்ளாஷ் பாயிண்ட்களை டிரெய்லர் கொண்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் வெளியாகி டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், இப்படம் மே 19, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.


விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


சமீபத்தில் வெளியான ‘பிகிலி’ மற்றும் ‘கோயில் சிலையே’ பாடல்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.


விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனின் பாத்திமா விஜய் ஆண்டனி, தனித்துவமான கதைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படங்களை தொடர்ச்சியாகத் தயாரித்து, விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை தந்துள்ளார். 'பிச்சைக்காரன் 2' படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றியைத் தரும் என்று வர்த்தக வட்டாரங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளன.


தொழில்நுட்ப குழு


லைன் புரொடியூசர்: சாண்ட்ரா ஜான்சன்,

நிர்வாக தயாரிப்பாளர்: நவீன்குமார்.டி,

ஒளிப்பதிவாளர்: ஓம் நாராயண் அசோசியேட்,

விளம்பர வடிவமைப்பாளர்: தானி ஏலே,

கலை இயக்குநர்: ஆறுசாமி,

ஸ்டைலிஸ்ட்: ஜி அனுஷா மீனாட்சி,

நடன இயக்குநர்கள்: அசார், ஹரி கிரண், கல்யாண்,

சண்டை பயிற்சி: ராஜசேகர், மகேஷ் மேத்யூ,

டிஜிட்டல் ஆலோசகர் : ஜி. பாலாஜி,

ரைட்டர்ஸ்: விஜய் ஆண்டனி, கே பழனி, பால் ஆண்டனி,

பாடலாசிரியர்: அருண் பாரதி,

வசனம்: கே பழனி,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்


0 comments:

Pageviews