தமிழரசன் விமர்சனம்

 

போலீஸ் காவலரான விஜய் ஆண்டனியின் மகனுக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு 70 லட்சம் செலவாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில் அதே மருத்துவமனையில் இதய மாற்று சிகிச்சைக்காக அமைச்சர் ஒருவரும் சேர்க்கப்படுகிறார். சிறுவனுக்கு முதலில் சிகிச்சை அளிப்பதைத் தவிர்த்து அமைச்சருக்கு முதலில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் அளிக்கிறது. வெகுண் டெழும் தமிழரசன் துப்பாக்கி முனையில் மருத்துவமனையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தன் மகனுக்கு  முதலில் சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். போலீஸ் பட்டாளம் மருத்துவமனையை சுற்றி வளைக்கிறது. இதன் முடிவு என்ன என்பதை நெகிழ்ச்சியுடன் கூறுகிறது தமிழரசன்.


போலீஸ் அதிகாரிக்கான உடல்மொழி, உடற்கட்டு என எல்லாவிதத்திலும் தன்னை பொருத்திக்கொள்ளும் விஜய் ஆண்டனியின் நடிப்பு அற்புதம். அழகான இல்லத்தரசி கேரக்டருக்கு நூறு சதவீதம் நியாயம் செய்திருக்கிறார் ரம்யா நம்பீசன். டாக்டராக வரும் சுரேஷ் கோபி அனுபவ நடிப்பால் கேரக்டரை வலுவாக தாங்கி பிடித்துள்ளார். ராதாரவி, சோனு சூட், சங்கீதா, சாயா சிங், கஸ்தூரி, முனீஸ்காந்த், மாஸ்டர் பிரணவ், ஓய்.ஜி.மகேந்திரன் என அனைவரும் கேரக்டரை மெருகேற்றும் விதமாக சிறப்பாக நடித்துள்ளனர். நோயாளியாக வந்தாலும் சிரிக்க வைக்கும் வேலையை சரியாக செய்துள்ளார் யோகிபாபு. ரோபோ சங்கரும் கூடுதலாகவே சிரிக்க வைக்கிறார். திரைக்கதையை இன்னும் வலுவாக செதுக்கி இருக்கலாம். இளையராஜா இசை பலம்.


மகனை காப்பாற்ற நினைக்கும் தந்தையின் கதையில் ஆஸ்பத்திரிகளில் நடக்கும் தில்லுமுல்லுகளை குடும்ப சென்டிமென்டுடன் கலந்து ஜனரஞ்சக படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாபுயோகேஸ்வரன்.


0 comments:

Pageviews