NOISE AND GRAINS நிறுவனம் மற்றும் பிரபல இசை அமைப்பாளர் வித்யாசாகர் இணையும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி

 

NOISE AND GRAINS நிறுவனம் மற்றும் பிரபல இசை அமைப்பாளர் வித்யாசாகர் இணையும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி சென்னை மற்றும் கொச்சியில் நடைபெற உள்ளது. பிரபல இசை அமைப்பாளர்கள் இளையராஜா, இசைப்புயல் AR ரஹ்மான் , ராக்ஸ்டார் அனிருத் , S.P.பாலசுப்ரமணியம், யேசுதாஸ் உட்பட பல இசையமைப்பாளர்கள் மற்றும் பிரபல பாடகர்களை வைத்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் NOISE AND GRAINS நிறுவனம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், அஜித்குமார், விஜய் மற்றும் முக்கியமான நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசை அமைப்பாளராக பணியாற்றிய வித்யாசாகருடன் முதல்முறையாக இணைத்து பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.


அடுத்த கட்டமாக 25 வருடங்களாக மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்து வரும் வித்யாசாகர் கொச்சியில் இசைநிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும் அதற்கான தேதி மற்றும் இடங்களை விரைவில் அறிவிப்பதாகவும் NOISE AND GRAINS நிர்வாக இயக்குனர்கள் கார்திக் சீனிவாஸ், அசோக்சந் மஹாவீர் தெரிவித்தனர்

0 comments:

Pageviews