கோஸ்டி விமர்சனம்

 

சிறையில் இருந்து தப்பிக்கும் ரவுடி கே.எஸ்.ரவிக்குமார் தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த ஐந்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களை கொலை செய்ய திட்டமிட, அந்த திட்டத்தை முறியடித்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வால் ஈடுபடுகிறார். இதற்கிடையே காஜல் அகர்வால் வீட்டில் பேய்கள் புகுந்து அவரை பயமுறுத்த அதனிடம் இருந்து தப்பிப்பதற்கு சாமியார்களின் உதவியை நாடுகிறார்.


ஒரு பக்கம் பேய் தொல்லை, மறுபக்கம் ரவுடி கே.எஸ்.ரவிக்குமார் தொல்லை என்று இந்த இரண்டு கோஸ்டிகளிடமும் சிக்கி தவிக்கும் காஜல் அகர்வால், அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார்? அவரை பயமுறுத்தும் பேய்கள் யார்? என்பதை காமெடியாக சொல்வதே ‘கோஸ்டி’ படத்தின் கதை.


கதையின் நாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தாலும் அவரை முழுமையாக பயன்படுத்த தவறியிருக்கிறார்கள். போலீஸ் வேத்தில் நடித்திருக்கும் காஜல் அகர்வால், காமெடி படம் என்பதால் காக்கி உடைக்கான கம்பீரம் இன்றி வலம் வருகிறார். ஒரு இடத்தில் அவருடைய உதடுகள் வசன உச்சரிப்போடு பொருந்தாதை இயக்குநரே கலாய்த்திருக்கிறார்.


யோகி பாபு, ஜெகன், ரெடின் கிங்ஸ்லி கோஸ்டியின் காமெடி காட்சிகள் வழக்கமானவையாக இருந்தாலும், அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.


காமெடி வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஐந்து இன்ஸ்பெக்டர்களை கொலை செய்யும் லட்சியத்தோடு பயணிப்பதும், அவர் ஒவ்வொருவரையும் கொலை செய்ய முயற்சிக்கும் போது, அங்கு நடக்கும் அலப்பறைகள் அனைத்தும் சிரிப்போ…சிரிப்பு.

0 comments:

Pageviews