குடிமகான் விமர்சனம்

 

வங்கி ஏ டி எம் களில் பணம் நிரப்பும் பணி செய்கிறார் விஜய் சிவன். வழக்கமாக நடக்கும் இப்பணியில் ஒரு குழப்பம் நேர்கிறது. 100 ரூபாய் நோட்டுக்கள் வைப்பதற்கு பதில் 500 ரூபாய் நோட்டுக்கள் வைத்துவிடுகிறார். பணம் லட்சக்கணக்கில் திருடு போகிறது. இதனால் விஜய் சிவன் வேலையும் பறிபோகிறது. இதற்கிடையில் அவருக்கு குளிர்பானம் குடித்தால் போதை யாகும் நோய் ஏற்படுகிறது. திருட்டுபோன பணத்தை மீட்டாரா? பறிபோன வேலை திரும்ப கிடைத்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.


விஜய் சிவன்தான் குடிமகான். இரண்டு குழந்தைக்கு தந்தையாக வரும் அவர் எதர்த்தமான நடிப்பில் ஜொலிக்கிறார். வீட்டில் மனைவி சாந்தினி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பதும் குடிகார தந்தை சுரேஷ் சக்ரவர்த்தியை சீண்டுவதுமாக ஜாலியாக போய்க் கொண்டிருக்கும் அவர் வாழ்க்கையில் திடீரென்று வீசும் பணநஷ்ட விஷயம் கதையையே திருப்பிப் போடுகிறது.

அதுவும் குடிகார சங்க தலைவர் நமோ நாராயணன் என்ட்ரிக்கு பிறகு நான்ஸ்டாப் காமெடிகள் அரங்கேறுகிறது.


பணம் தர முடியாது என்று விரட்டியடிக்கும் ஈவென்ட் மேனேஜர் நடத்தும் திருமண விழாவுக்கு செல்லும் விஜய் சிவன், நமோ நாராயணன் கோஷ்டி கூல்டிரிங்க்சில் பேதி மாத்திரை கலந்து கொடுத்து திருமணத் துக்கு வந்தவர்களை தலை தெறிக்க ஓடவிடுவதும், 8 அடி உயர நெட்டை ரவுடியிடம் செம்ம மாத்து வாங்குவதாகட்டும் , டெலிவரி பாயிடம் பணம் வசூலிக்க நடக்கும் நடுரோட்டு மோதலாகட்டும் சிரித்து சிரித்து வயிறு வலித்து விடுகிறது.


கவலை மறந்து சிரிக்க வைப்ப துடன் செய்யும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும் என்ற மெசேஜ் சொல்லியிருக் கிறார் இயக்குனர் பிரகாஷ் என்.


0 comments:

Pageviews