ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா’ தொடரிலிருந்து அருமையான “துணை வருவேன்” பாடல், ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது
“ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா” தொடரை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தற்போது பிரத்தியேகமாகக் கண்டுகளியுங்கள்!!
ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா தொடரின் ரசிகர்களுக்காக ஒரு சிறப்புப் பரிசு . இந்தத் தொடரின் கடைசி எபிஸோட் வரும் வெள்ளிக்கிழமை, மார்ச் 17 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் நிலையில், ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா தொடரிலிருந்து அருமையான “துணை வருவேன்” பாடல், ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை விருது பெற்ற பாடகி மற்றும் இசையமைப்பாளர் ஜஸ்லீன் ராயல் இசையமைத்துப்
பாடியுள்ளார். இந்த பாடலில் ஹன்சிகாவின் திருமண நிகழ்வுகளின் சில பகுதிகள் மிகச்சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இந்தப் பாடல் ஹன்சிகாவுக்கு ஒரு அழகான திருமண பரிசாக உருவாக்கப்பட்டது. மேலும் திருமண வாழ்க்கை என்ற மகிழ்ச்சியான புதிய அத்தியாயத்தில் நுழையும் தம்பதிகளின் காதல் காத்திருப்பு, மற்றும் அவர்கள் திருமணத்தோடு துவங்கவுள்ள புதிய பயணத்தையும் மிகச்சிறப்பாக இந்த பாடல் சித்தரிக்கிறது.
“துணை வருவேன்” பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா மற்றும் சஞ்சித் ஹெக்டே ஆகியோரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்த பாடல், ஹன்சிகா மற்றும் சோஹேலின் அற்புதமான திருமண வாழ்கையைக் கூறுவதோடு, இந்தியப் பார்வையாளர்களின் இதயங்களையும் கொள்ளை கொள்கிறது.
ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின் கடைசி எபிசோட், மார்ச் 17, வெள்ளிக்கிழமை அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது, ரசிகர்கள் இறுதியாகத் திரையில், ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல் கதுரியா ஜோடியின் திருமண தருணங்களைக் கண்டுகளிக்கலாம்.
விரைவில் ஹன்சிகாவின் லவ், ஷாதி, டிராமா தொடரின் கடைசி எபிசோடை காண தயாராகுங்கள்.
மார்ச் 17, 2023 அன்று ஸ்ட்ரீமிங் ஆகும் ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின் கடைசி எபிசோடை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள்!
https://www.youtube.com/watch?v=1VxF2tAL5CY
0 comments:
Post a Comment