வாரிசு திரைவிமர்சனம்

 

மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமாருக்கு (ராஜேந்திரன் பழனிச்சாமி) ஸ்ரீகாந்த் (ஜெய்), ஷாம் (அஜய்) விஜய் (விஜய் ராஜேந்தர்) என மூன்று மகன்கள். இதில் கடைக்குட்டியான விஜய், தந்தையின் எண்ணத்திற்கு மாறாக செயல்பட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். சந்தர்ப்ப சூழல் காரணமாக அவர் மீண்டும் திரும்பி வர குடும்பமே சிக்கலில் இருக்கிறது. இதை சரி செய்ய விஜய் என்னவெல்லாம் செய்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.


கஷ்டங்களோடு குடும்பத்தை தாங்கிப்பிடிக்கும் அம்மா, எல்லோரையும் உதாசீனப்படுத்தும் அப்பா, பேராசை கொண்ட அண்ணன்கள், திசைமாறும் இளம் பெண் என ஒவ்வொருவரின் பிரச்னைகளையும் மேலோட்டமாக தொட்டுச் செல்கிறது படத்தின் திரைக்கதை. இயக்குநர் வம்சி பைடிபள்ளிக்கு திரைக்கதையில் கூடுதலாக உதவியிருக்கிறார் பாடலாசிரியர் விவேக். இவரே படத்தின் வசனகர்த்தா.

 

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த பட்டதாரியாக வரும் விஜய் வழக்கம் போல் நடன அசைவுகளால் மிளிர்கிறார். ஆக்‌ஷன் மற்றும் காதல் காட்சிகளில் அசரடிக்கிறார். படத்தை விட பாடல் காட்சிகளின் போதே அரங்கம் ஆர்ப்பரித்து. சில இடங்களில் அவரின் முகபாவனைகள் படத்தை உயிர்ப்புடன் வைக்கிறது. விஜய் படத்திற்கு ஏற்ற பாடல்களை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் தமன். ஆராரி ஆரிரோ, ரஞ்சிதமே,  தீ தளபதி பாடல்கள் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவும், பிரவீன்கே.எல் படத்தொகுப்பும் ஓகே. வாரிசு படத்தை கண்டிப்பாக குடும்பங்கள் கொண்டாடும். 


0 comments:

Pageviews