துணிவு திரைவிமர்சனம்

 

சென்னையில் இயங்கி வரும் பிரபலமான தனியார் வங்கியை ஒரு கொள்ளை கும்பல் கொள்ளையிட திட்டமிடுகிறது. துப்பாக்கியுடன் உள்ளே நுழையும் கும்பல், அங்குள்ள ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் பணயக்கைதியாக வைத்துக்கொண்டு, பணத்தை கொள்ளையடிக்கிறது. அங்கு வாடிக்கையாளர் வேடத்தில் இருக்கும் அஜித், கொள்ளை கும்பலை சுட்டு வீழ்த்துகிறார். ஆனால் அரசாங்கமும், காவல்துறையும் அஜித்தை சுட்டுக்கொள்ள திட்டமிடுகிறது. அவர்களிடம் அஜித் சிக்கினாரா? அஜித் கொள்ளையடிக்க திட்டமிட்டாரா? அதற்கான காரணம் என்ன? என்ற விறுவிறுப்பான காட்சிகளுடன் படம் நகர்கிறது. 


முதல் பாதி முழுவதும் யூகிக்கக் கூடிய அளவிற்கு இருந்தாலும், அஜித்தின் டான்ஸூம், நீராவ் ஷாவின் ஒளிப்பதிவும் படத்தை ஓரளவு உயிர்ப்புடன் கொண்டு செல்ல உதவுகிறது. இரண்டாம் பாதியில் சொல்லப்படும் அஜித்தின் பின்னணியும், அம்பலமாகும் யுவர் பேங்கின் மோசடியும் படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்கிறது.


வழக்கம் போல் அஜித் பேசும் பஞ்ச் வசனங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. “ஆயிரம் ரூபாய் திருடனவன அடிச்சி தோலுரிப்பீங்க…கோடிக்கணக்குல கொள்ளையடிச்சவனுங்கள கண்டுக்க மாட்டீங்க” என காவலர்களை பார்த்து அஜித் பேசும் வசனம் பயங்கர மாஸ். அஜித்துக்கு அடுத்தபடியாக கவனம் ஈர்க்கும் கதாபாத்திரம் மோகன சுந்தரத்துடையது. அவர் வரும் இடங்களில் காமெடிக்கு பஞ்சமில்லை. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், வீரா, மகாநதி சங்கர் என அனைவரும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர். ஜிப்ரான் பின்னணி இசை மிரட்டல்


அஜித்குமாரின் அறிமுக காட்சியில் விசில் சத்தம் காதைப் பிளக்க ஒரு சில நிமிடங்களுக்கு காதில் எந்த வசனமும் விழாமலே இருக்கிறது. ரசிகர்களுக்கான படம் முதல் பாதி என இயக்குநர் ஹெச் வினோத் சொன்ன மாதிரியேதான் துவங்கியிருக்கிறது. படம் துவங்கி சில நிமிடங்களிலேயே அமர்க்களமான காட்சிகளால் ரசிகர்கள் உற்சாகத்திலேயே மிதந்து வருகின்றனர். 


துணிவு - கண்டிப்பாக பார்க்கலாம் 

0 comments:

Pageviews