ஓ மை கோஸ்ட் விமர்சனம்

 

ஆபாச பட இயக்குனராக வரும் சதீஷ் அவரது நண்பர் ரமேஷ் திலக், சதீஷின் காதலியாக வரும் தர்ஷா குப்தா. இந்த தர்ஷாவிற்கு அடிக்கடி கனவில் அமானுஷ்யமான காட்சிகள் வந்து செல்கிறது, ஒருக்கட்டத்தில் பேய் பிடித்தும் விடுகிறது. யாருடைய ஆவி என்றால் அனகொண்டபுரம் மகாராணியாக இருந்த சன்னி லியோனின், இந்நிலையில் தன்னுடைய அனகொண்டபுரம் சமஸ்தானத்திற்கு செல்ல வேண்டுமென சதீஷையையும், ரமேஷ் திலக்கையும் மிரட்ட, மூவரும் அந்த ஊருக்கு செல்கின்றனர். இதன்பிறகு அங்கு என்ன நடந்தது? சன்னி லியோன் எப்படி இறந்தார்? இறுதியாக ஆவியை விரட்டினார்களா? என்பதே முழுக்கதை.

பேயாக நடித்திருக்கும் சன்னி லியோன் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனக்கான கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்துள்ளார். தமிழ் மொழி வசனம் பேசுவதில் தனக்கான முழு உழைப்பும் கொடுத்து பாராட்டை பெறுகிறார்.

முக்கிய கதாபாத்திரமான சதீஷ் தன் காமெடியில் கவனம் செலுத்தி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். கதாநாயகியாக வரும் தர்ஷா குப்தா தனக்கான வேலையை சிறப்பாக செய்துள்ளார். ரமேஷ் திலக், பாலா, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர்.

இயக்குனர் யுவன் ஒரு கவர்ச்சியான பேய் படத்தை உருவாக்க முயற்சித்துள்ளார். பயமோ பரபரப்போ இல்லாமல் ஜாலியாக திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இருந்தாலும் ஒரு சில காட்சிகள் நம் பொறுமையை சோதிக்க கூடியவையாக உள்ளது.

ஜாவேத் ரியாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தீபக் டி மேனன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பார்க்கும் வண்ணம் உள்ளன.

மொத்தத்தில் ஓ மை கோஸ்ட் – ஜாலியான பேய்

0 comments:

Pageviews