சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "XIX Chennai District Masters Athletic Championship 2022" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது

இப்போட்டியை சென்னை மாவட்ட நிர்வாகத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா, மூத்த துணைத் தலைவர்கள் திரு கலைச்செல்வன், திரு சாலமன் மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது
இந்த போட்டியின் முதல் நாளில் (டிசம்பர் 30, 2022) திரைப்பட இயக்குனர் திருமதி கிருத்திகா உதயநிதி, திரைப்பட நடிகர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் திரு. ஆதவ் அர்ஜுனா, தொழிலதிபர் திரு சூர்யபிரகாஷ் போன்றவர்கள் கலந்து கொண்டு போட்டிக்கான பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
இந்த போட்டியின் இரண்டாம் நாளில் (டிசம்பர் 31, 2022), தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. எஸ். ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு துறை அமைச்சர் மாண்புமிகு திரு. சிவ. வீ. மெய்யநாதன், திரு K P கார்த்திகேயன் IAS (Member Secretary, SDAT), திரைப்பட தயாரிப்பாளர் G.K.ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியை தொடங்கி வைத்து, நீண்ட நேரம் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்து பேசியது விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

60+ வயதினருக்கான 100 மீட்டர் ஆண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் திரு M.செண்பகமூர்த்தி 13.8 நொடிகளில் முதலாவதாக வந்து வெற்றி பெற்றார்

இரண்டு நாட்களாக நடந்த இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஒட்டப்பந்தயம், தாண்டுதல், எறிதல் போன்ற பலவகை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் ஓசுரில் வரும் ஜனவரி 6,7,8 தேதிகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்

0 comments:

Pageviews