ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்

 


2019ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ ஆத்ரேயா' படத்தின் ரீ மேக்தான் இந்த 'Agent கண்ணாயிரம்'. படத்தின் இயக்குநர் மனோஜ் பீதா, இதற்கு முன்பாக 'வஞ்சகர் உலகம்' படத்தை இயக்கியவர்.


தன் தாயின் இறந்த சேதியைக் கேட்டு சொந்த ஊருக்கு வரும் கண்ணாயிரத்தால், தன் தாயின் உடலைக்கூட பார்க்க முடியவில்லை. இதற்கிடையில் ஊருக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் சடலங்கள் கிடக்கின்றன. இந்த வழக்கை காவல்துறை சரியாக கண்டுகொள்ளாத நிலையில், அதைத் துப்பறிய ஆரம்பிக்கிறார் கண்ணாயிரம். அதைத் திசை திருப்ப முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சிகளை மீறி, குற்றவாளியை கண்ணாயிரம் கண்டறிந்து டிடெக்டிவாக மாறினாரா என்பதுதான் மீதிக் கதை.


ஏஜென்ட் கண்ணாயிரமாக நடித்திருக்கும் சந்தானம் தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் படத்தை தாங்கி பிடிக்கிறார். கதாநாயகியாக வரும் ரியாவின் நடிப்பு சிறப்பு.


முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராமதாஸ் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.


யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிக்கலாம்.


சில ஆண்டுகளாகவே சந்தானத்தின் படங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் ஏஜென்ட் கண்ணாயிரம் ஒரு கம்பேக் படமாக இருக்கும்.

0 comments:

Pageviews