பவுடர் விமர்சனம்

 


தாதா 87  படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த விஜய்ஸ்ரீஜி இயக்கத்தில் பிரபல பி.ஆர்.ஓ. நிகில் முருகன் கதை நாயகனாக நடிக்க வெளியாகி இருக்கும் திரைப்படம், பவுடர்.


பவுடர் ( சாயம்)  பூசி, தங்கள் ஒரிஜினல் முகத்தை மறைந்து நடமாடும் மனிதர்களை, தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ. ஒரே இரவில் நடக்கும் கதை.  ஆரம்பமே விறுவிறுப்பு.


மறுநாள் தேர்தல் நாமினேசன்..  சிட்டிங் எம்.எல்.ஏ. மக்களுக்கு எதிரானவர் என்பதால் அவரை கொலை செய்து உடலை அப்புறப்படுத்த செல்கிறார்கள் இளைஞர்கள்.


காவல்துறை ஆணையாளர் வீட்டில்  ஒரு பிரச்சினை நடக்க.. அதைத் தீர்த்து வைக்க காவல் அதிகாரி நிகிலை அழைக்கிறார் அவர். தன் மகள் அனித்ராவை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலனை, கொலை செய்கிறார் வையாபுரி: அவருக்கு உதவியாக வந்த விஜய் ஸ்ரீஜி, பிறகு அங்கிருந்து செல்ல.. இன்னொரு பிரச்சினையில் சிக்குகிறார். மறுநாள் திருமணம் என்கிற நிலையில், தனது நிர்வாண படத்தை வைத்து மிரட்டும் இளைஞனை துப்பாக்கியால் சுட்டு விடுகிறார் வித்யா பிரதீப்.


இதன் பிறகு என்ன ஆனது..  என்பதே மீதிக்கதை.


ஆனால் தனது தெளிந்த திரைக்கதையால் எந்தவித குழப்படிகளும் இன்றி நேர்த்தியாக – இறுதிவரை விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி.


பிரபல பி.ஆர்.ஓ. நிகில் முருகன், முதன்மை கதாபாத்திரத்தில் – காவல்துறை அதிகாரியாக – நடித்து உள்ளார். இயல்பாகவே 90 சதம் கம்பீரம்.. 10 சதம் கனிவு கொண்ட அவரது குரல், பாடி லேங்குவேஜ் ஆகியவை கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறது.  பல நூறு திரைப்படங்களுக்கு பி.ஆர்.ஓ.வாக வெற்றிகரமாக பணியாற்றி இருந்தாலும், கேமரா முன் நிற்பது என்பது வேறு. ஆனால் அந்த பதட்டம் இன்றி இயல்பாக  நடித்து காவல்துறை அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார். பாராட்டுகள்.

அதே போல முக்கிய கதாபாத்தங்களில் தோன்றும் வையாபுரி, அனித்ரா,வித்யா பிரதீப், சாந்தினி அனைவருமே சிறப்பான நடிப்பை அளித்திருக்கிறார்கள்.


விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் என்பதோடு சமுதாயத்தில் நடக்கும் முக்கிய பிரச்சினைகளை தோலுரித்து காட்டி இருக்கிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி.


அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் விதமாக படத்தை உருவாக்கி உள்ள அவருக்கு பாராட்டுகள்.

0 comments:

Pageviews