லவ் டுடே விமர்சனம்
ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் பிரதீப்பும் (பிரதீப் ரங்கநாதன்), நிகிதாவும் (இவனா) காதலிக்கிறார்கள். உன்னை எனக்கு நல்லாத் தெரியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள், இருவரும். காதல் விவகாரம் நிகிதாவின் அப்பா வேணு சாஸ்திரிக்கு (சத்யராஜ்) தெரியவர, அவர் உத்தமனை அழைத்துப் பேசுகிறார். இருவரும் தங்கள் ஃபோனை ஒரே ஒரு நாள் மாற்றிக்கொள்ள வேண்டும், பிறகு சுமூகமாக எல்லாம் சென்றால் திருமணம் என நிபந்தனை விதிக்கிறார். அதன்படி மாற்றிக்கொள்கிறார்கள். இருவர் ஃபோனுக்குள்ளும் இருந்து பூதமாகக் கிளம்புகிறது, அவரவர் ரகசியங்கள். அது பெரும் மோதலாகிவிட, இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பதுதான் படம்.
'கோமாளி' படத்தை இயக்கிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கதை எழுதி, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அவரது திரை தோன்றல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. நாயகி நிகிதாவாக நடித்திருக்கும் நடிகை இவானாவின் நடிப்பு பாராட்டுக்குரியது. நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தி அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் வசீகரிக்கிறார். வேணு சாஸ்திரியாக நடித்திருக்கும் சத்யராஜ், சரஸ்வதி ஆக நடித்திருக்கும் ராதிகா சரத்குமார் தங்களின் எல்லைக்குள் நின்று வழக்கமான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
கதை, வசனம், காட்சி மொழி, காட்சி கோணங்கள், பின்னணி இசை என அனைத்தும் படமாளிகையில் ரசிகர்களுடன் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
0 comments:
Post a Comment