காபி வித் காதல் விமர்சனம்

 


ஸ்ரீகாந்த், ஜீவா மற்றும் ஜெய், இவர்கள் மூவரும் சகோதரர்கள். இவர்களது தங்கை திவ்யதர்ஷினி. ஜீவா ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் ஐஸ்வர்யா தத்தாவும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் ஜீவாவை ஐஸ்வர்யா ப்ரேக் அப் செய்துவிட சோகத்தில் இருக்கிறார் ஜீவா. ஸ்ரீகாந்துக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் அவருடைய மனைவி மீதான ஆசை அவருக்கு குறைகிறது. இதனால் மற்ற பெண்களை கண்டால் ஜொள்ளு பேர்வழியாக சுற்றி வருகிறார். ஜெய் தனது சிறுவயது தோழியாக இருந்த பெண்ணின் மீது காதல் கொள்கிறார். ஆனால் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருக்கிறது. அந்த பெண்ணின் மனதை மாற்றி அவரை மணக்க திட்டமிடுகிறார். அப்படி இது நடக்காத பட்சத்தில் தொழிலதிபர் ஒருவரின் மகளை திருமணம் செய்து கொள்ள ப்ளான் போட்டு வைக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஜீவாவுக்கும், அந்த தொழிலதிபரின் மகளுக்கும் காதல் ஏற்பட்டு திருமணத்தில் வந்து நிற்கிறது. இந்த திருமணத்தை நிறுத்த சதி செய்கிறார் ஸ்ரீகாந்த். 


இப்படியான பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே ஜெய் தனது பால்ய தோழியான காதலியோடு சேர்ந்தாரா? ஜீவா திருமணம் நடந்ததா? ஸ்ரீகாந்த் ஏன் சதி செய்தார்? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பரபரப்பாக பயணிக்கிறது படம்.


சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடிதான். ஆனால் முந்தைய படங்களை விட இந்த படத்தில் காமெடி காட்சிகள் அவ்வளவாக சிரிப்பை ஏற்படுத்தாததாக தெரிகிறது. யோகிபாபு, கிங்ஸ்லி காமெடி காட்சிகளில் ஒரு சில இடங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. முழுவதும் காமெடியாக பயணித்துவிடுவதால் சில கதாப்பாத்திரங்களின் உணர்வுகளோடு ஒன்றமுடிவதில்லை.

0 comments:

Pageviews