பேட்டைக்காளி விமர்சனம்

 


வெற்றிமாறன் தயாரிப்பில் வெப் தொடராக உருவாகியுள்ள பேட்டைக்காளி ஆஹா ஓடிடி தளத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே இந்த வெப் தொடரின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள மூன்று எபிசோடுகளும் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கதைப்படி தாமரைக் குளம், முல்லையூர் கிராமங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பற்றியும் அதில் இருக்கும் ஆதிக்க அரசியல் பற்றியும் இந்தத் தொடர் தெளிவாக காட்டுகிறது. தாமரை குளத்தைச் சேர்ந்த பண்ணையார் வேல ராமமூர்த்திக்கு தன்னுடைய ஜல்லிக்கட்டு மாட்டை யாரும் அடக்காததால் ஒரு கர்வம் ஏற்படுகிறது. ஆனால் அந்த மாட்டை அடக்கி அவரை அவமானப்படுத்தும் இளைஞராக வருகிறார் முல்லையூரை சேர்ந்த கலையரசன்.


இந்தப் போட்டியில் பண்ணையாரின் மாடு இறந்து விடுகிறது. இதனால் கோபமடைந்த பண்ணையார் தன்னுடைய மகனை தூண்டிவிட்டு கலையரசனை கொலை செய்ய வைக்கிறார். இதனால் கலையரசனின் உயிரும் பறிபோகிறது. அதற்கு பழி தீர்க்க வருகிறார் கலையரசனின் தாய் மாமன் கிஷோர். பக்காவாக திட்டம் போட்டு பண்ணையாரை கொலை செய்ய வரும் கிஷோர் எதிர்பாராத விதமாக அவருடைய டிரைவர் மாயாண்டியை கொன்று விடுகிறார்.


அப்போது நடக்கும் சண்டையில் பண்ணையாருக்கு பார்வை போகிறது. இப்படி பயங்கர எதிர்பாராத சம்பவங்களுடன் இரண்டு எபிசோடுகள் காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது எபிசோட் இன்னும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. அதாவது அந்த பண்ணையாருக்கு சிறு வயது முதலே தன் வீட்டில் வளரும் மீனாட்சியின் மீது ஒரு ஆசை இருக்கிறது. ஆனால் அந்த மீனாட்சி பண்ணையாரின் டிரைவர் மாயாண்டியை காதலிக்கிறார்.


ஆனாலும் பண்ணையார் மீனாட்சி கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்கிறார். இது பிடிக்காத அவருடைய மகன் அப்பாவை பழி வாங்குவதற்காக தன்னுடைய நண்பன் கலையரசனை அவருக்கு எதிராக தூண்டிவிடுகிறார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவரே கலையரசனை கொலை செய்து விடுகிறார். இப்படி பல மர்ம முடிச்சுகள் இந்த எபிசோடில் அவிழ்க்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பழிவாங்கும் படலத்தில் பண்ணையாரின் மாடு எந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு வந்தாலும் முல்லையூறை சேர்ந்தவர்கள் அதை அடக்குவார்கள் என்று கலையரசன் மரணத்திற்கு நியாயம் செய்ய கிஷோர் சவால் விடுகிறார். இதற்கிடையில் மாயாண்டியின் தங்கை தேன்மொழியின் கேரக்டரின் அறிமுகமும் காட்டப்படுகிறது. தேன்மொழியாக வரும் ஷீலா 

ஆற்றில் அடித்துவரப்படும் கன்றுக்குட்டியைக் காப்பாற்றி ஜல்லிக்கட்டுக்குத் தயார் படுத்துவது, அந்த காளை களத்திலிறங்கும்போது குழந்தையாய் குதுகலிப்பது என ஷீலா ராஜ்குமார் கவர்கிறார்!

வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும் கதைக்களத்தை அதனதன் தன்மை மாறாமல் அதனதன் பிரமாண்டத்தோடு, துளியும் விறுவிறுப்பு குறையாமல் படமாக்கியிருக்கும் இயக்குநர் ல. ராஜ்குமாரின் உழைப்புக்கு எழுந்து நின்று சல்யூட் அடிக்கலாம்!

‘ஆஹா’ தமிழ் ஓடிடி தளத்தில் 4 எபிசோடுகளை கடந்து 5-வது எபிசோடையும் நெருங்கியிருக்கிற பேட்டைக்காளி யதார்த்த சினிமா ரசிகர்களுக்கு ஃபுல்மீல்ஸ்; ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதம்! இப்படி விறுவிறுப்பை கூட்டி இருக்கும் இந்த தொடருக்கு தற்போது ரசிகர்களின் ஆதரவு அதிகமாகி வருகிறது.

0 comments:

Pageviews