Kaalangalil Aval Vasantham Review

 


பெரும்பாலான திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவது போன்றே நிஜ வாழ்க்கையிலும் காதலை அணுகுகிறான் ஷ்யாம் (கௌசிக் ராம்). அதை அவனது வெள்ளந்தி குணமாக எண்ணித் திருமணம் செய்து கொள்கிறாள், ராதே (அஞ்சலி நாயர்). மகிழ்ச்சியான மண வாழ்வின் தருணங்களை, சினிமா போலவே கொண்டாட நினைக்கும் கணவனை, யதார்த்த உலகுக்கு இழுத்து வர முயலும்போது ஈகோ வெடிக்கிறது. இறுதியில் ராதே, தன் முயற்சியில் வென்றாரா? இல்லையா என்பது கதை.


காதல் கணவன் ஷ்யாமுக்கு காதலின் உன்னதம் எதில் அடங்கியிருக்கிறது என்பதை உணர்த்தி, கற்பிதங்களிலிருந்து அவனை விடுதலை செய்ய முயலும் முதிர்ச்சியும் முயற்சியும் கொண்ட பெண்ணாக வரும் ராதே,மகனிடம் சிக்கி தடுமாறுவதைப் பார்த்து, மருமகளின் பக்கம் நிற்கும் நாயகனின் அப்பா, மகனின் முதிரா மனநிலைக்கு அடிப்படை முன்மாதிரியாக இருக்கும் அவன் அம்மா என அட்டகாசமான கதாபாத்திர எழுத்து வழியாக ஒவ்வொரு கேரக்டரையும் ரசனையும் நகைச்சுவையையும் தொட்டு உலவவிட்டிருக்கிறார் இயக்குநர் ராகவ் மிர்தாத்.

0 comments:

Pageviews