படவெட்டு விமர்சனம்

 


ரவி(நிவின் பாலி) எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலிருக்கிறார். மழை வந்தால் வீடு ஒழுகுவதால் ரவியை அவரது அம்மா திட்டுகிறார்.  இவர்களது ஏழ்மையை பயன்படுத்தும் அரசியல்வாதி ஒருவர் ரவியின் வீட்டை புதுப்பித்து தந்து வீட்டு எதிரே ஸ்பான்சர் செய்து புதுப்பித்தது என்று கட்யின் சி கல்வெட்டு நடுகிறார். வேலையில்லாமல் வெட்டியாக இருக்கும் ரவியை ஊரே ஸ்பான்சர் ரவி என கிண்டல் செய்கிறது. அதே அரசியல் கூட்டம் விவசாயிகளின் நிலங்களையும் அபகரிக்க திட்டமிடுகிறது. இதில் கோபம் அடையும் ரவி, கட்சியினர் தன் வீட்டுமுன் வைத்திருந்த கல்வெட்டை உடைத்து நொறுக்குகிறான். அந்த அரசியல்வாதியும், அவருடைய திட்டமும் என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நிவின் பாலி, அரசியல்வாதிக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். அதே சமயம், சும்மா உட்கார்ந்திருப்பதில் பயனில்லை என்று அவர் எடுக்கும் முயற்சிகளும், விவசாய நடவடிக்கைகளும் இளைஞர்களை உத்வேகப்படுத்துகிறது. நாயகியாக நடித்திருக்கும் அதிதி பாலன் பார்வையிலேயே தனது ஒட்டு மொத்த காதலையும் வெளிப்படுத்தும் சக்தி படைத்தவராக இருக்கிறார் .

அரசியல்கட்சித் தலைவராக வருகிறார் ஷம்மிதிலகன். அவருடைய அப்பா திலகனுக்கு இணையாக நடிப்பில் மிரட்டுகிறார். தீபக்மேனனின் ஒளிப்பதிவில் கண்ணூரின் அழகு கட்டற்றுக் காணக்கிடைக்கிறது. கொட்டும்மழையில் தேநீர்க்கடைக் காட்சிகள் அழகு. கோவிந்த்வசந்தாவின் இசை படத்தின் மதிப்பை உயர்த்துகிறது.  லிஜுகிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கிறார்.  பரப்புரை தொனியில்லாமல் ஆதிக்கச் சக்திகள் எப்படி இயற்கையையும் மண்வளத்தையும் கொள்ளையடிக்கின்றன என்பதை ஷம்மிதிலகனின் தொழிலை வைத்துச் சொல்லியிருக்கிறார்.

”நம் மண், நம் வீடு, நம் நாடு” என்ற மக்கள் முழக்கத்தோடு முடிவடையும் படம், யாருக்கு எதிராக இந்த முழக்கத்தை நாம் எழுப்ப வேண்டும் என்பதை மிக அழகாக சொல்லு படம், இப்படிப்பட்ட போர்குனம் இல்லை என்றால், நாம் எதையெல்லாம், எப்படியெல்லாம் அவர்களால் இழக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகவும் சொல்லியிருக்கிறது.


0 comments:

Pageviews