ஆற்றல் திரை விமர்சனம்

 


மெக்கானிக்கல் இன்ஜினியராக இருக்கும் விதார்த், ஆள் இல்லாமல் ஓடும் காரை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அதற்கு பத்து லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இதற்காக விதார்த்தத்தின் தந்தை சார்லி 10 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து கொண்டு வருகிறார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை கொலை செய்து விட்டு பணத்தை திருடி சென்று விடுகின்றனர். இதனை அடுத்து தனது தந்தையின் கொலை காரணமானவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் விதார்த் இறங்குகிறார். இறுதியில் விதார்த் மர்ம நபர்களை கண்டுபிடித்தாரா? அவரது கனவு என்ன ஆனது? என்பதை படத்தின் மீது கதை.


விதார்த் வழக்கம்போல எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். விதார்த் என் தந்தையாக சார்லி நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். நாயகியாக நடித்துள்ள ஷிரிதா ராவ் அழகான நடிப்பை கொடுக்க விக்னேஷ், வம்சி கிருஷ்ணா என படத்தில் நடித்துள்ளவர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். வில்லனாக நடித்திருக்கும் வம்சிகிருஷ்ணாவின் வேடம் ஆபத்தானதாக அமைந்திருக்கிறது. அதற்கேற்ப நடித்து பலம் சேர்க்கிறார். கொளஞ்சிகுமாரின் ஒளிப்பதிவில் பறவைப்பார்வைக் காட்சிகள் அதிகம். அவை கதையோட்டத்துக்குப் பயன்பட்டிருக்கின்றன. அஸ்வின்ஹேமந்த்தின் இசை உறுத்தாமல் உடன்படுகிறது. விஜய்வேலுக்குட்டியின் படத்தொகுப்பில் படம் வேகமாக நகர்கிறது. விக்கியின் சண்டைப்பயிற்சியில் துள்ளுந்துத் துரத்தல்கள் மற்றும் இறுதிச்சண்டை நன்று. சின்ன கதையை வைத்துக் கொண்டு அதைச் சீரிய முறையில் கொடுக்க மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் கே.எல்.கண்ணன். 

0 comments:

Pageviews