சஞ்சீவன் திரை விமர்சனம்

 


வினோத் லோகிதாஸ், சத்யா, ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, யாசின் ஆகிய ஐந்து பேரும் நெருங்கிய தோழர்கள். வினோத் ஸ்னூக்கர் விளையாடுவதில் கில்லாடி. குடி கும்மாளம் என்று இருக்கும் நண்பர்கள் மத்தியில் ஒழுக்கமானவராக இருக்கிறார். ஸ்னூக்கர் போட்டியிலும் வென்று பதக்கம் பெறுகிறார். அவரை நாயகி திவ்யாவுக்கு பிடித்துப்போகிறது. இருவரும் காதலிக்கிறார்கள். ஸ்னூக்கர் போட்டியில் வென்றதை கொண்டாட நண்பர்கள் காரில் ஏற்காடு பயணிக்கின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்பது நெஞ்சை உறைய வைக்கும் மீதி கதை. 


நண்பர்களின் கேலி, குடி, கும்மாளம், காதல் என்று காட்சிகள் கலகலப்பாக நகர்கிறது. சாதாரண ஸ்னூக்கர் போட்டியில் வினோத் லோகிதாஸ் கலந்து கொண்டு தோற்பது, பின்னர் கடும் பயிற்சிகள் எடுத்து நிஜ போட்டியில் ஜெயிப்பது, திவ்யாவை காதலிப்பது, கோபத்தில் எகிறும் நண்பர்களை அமைதிப்படுத்துவது என்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். சத்யா, ஷிவ் நிஷாந்த், யாசின் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். எந்த இடத்திலும் படம் தொய்வில்லாமல் செல்வது படத்திற்கு பலம், அதை ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மணி சேகர். ஸ்னூக்கர் போட்டியையும், இறுதியில் வரும் சேசிங் காட்சியையும், நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கார்த்திக் சொர்ண குமார். தனுஷ் மேனனின் பின்னணி இசை சிறப்பு.


மொத்தத்தில் விறுவிறுப்பாக நகர்கிறது சஞ்சீவன்.

0 comments:

Pageviews