சினம் விமர்சனம்

 


நேர்மையான காவல் அதிகாரியான அருண் விஜய் காதல் மனைவி, தூங்கும் முன்னர் கதை கேட்கும் குட்டி குழந்தை என அழகான குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். தனது மனைவியை கொலை செய்தவர்களையும், கொலைக்கான காரணத்தையும் தேடி அலைகிறார் அருண் விஜய். கொலைக்கு பின்னால் இருக்கும்  மர்மம் என்ன? அருண் விஜயின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதே படத்தின் கதை.


நாயகனாக நடித்திருக்கும் அருண் விஜய் எப்போதும் போல கட்டுமஸ்தான உடல் தோற்றத்துடன், காவல் அதிகாரி வேடத்திற்கு நன்றாகவே பொருந்தியிருக்கிறார். சண்டை காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.  அருண்விஜய்க்கு பிறகு காளி வெங்கட் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகி பாலக் லால்வானி சிறிது நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்துகொண்டு, கற்பனை காட்சிகளுடன் படமாக்கியுள்ளனர். சின்னச் சின்னக் காட்சிகளைக் கூட மிக சிறப்பாக இயக்கி படமாக்கலில் கவர்கிறார் இயக்குனர் ஜி என் ஆர் குமாரவேலன்.


சினம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

0 comments:

Pageviews